தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி (Video Conferorica) ஆய்வுக் கூட்டம் 28 செப்டம்பர் 2020 அன்று நடைபெறுதல் - சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 22.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 22, 2020

Comments:0

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி (Video Conferorica) ஆய்வுக் கூட்டம் 28 செப்டம்பர் 2020 அன்று நடைபெறுதல் - சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 22.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6.
முன்னிலை : முனைவர் மு.பழனிச்சாமி
நகாண். 10390 /ஜே2/2020 நாள் : 22.09.2020,
பொருள் : தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி (Video Conferorica) ஆய்வுக் கூட்டம் 28 செப்டம்பர் 2020 அன்று நடைபெறுதல் - சார்ந்து

அனைத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி (Video Conference) வாயிலாக அந்தந்த மாவட்ட NIC centres 28.09.2020 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 5.45 பணி வரை மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் பள்ளிக் கல்வித் துறை ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டப் பொருள் சார்ந்த படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்து 25.09.2020 பிற்பகல் 4.00 மணிக்குள் dcaseetionegmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்டப் பொருளில் இடம்பெற்றுள்ள படியங்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் விவரங்களுடனும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் விவரங்களுடனும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளின் விவரங்களுடனும் தயார் நிலையில் காணொலிக் காட்சி ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை புரிய வேண்டும் என தெரிவிக்கலாகிறது.
மாவட்ட NIC centres சமூக இடைவெளியுடன் அமர்வதற்கு போதுமான இடவசதி இருப்பின் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்கலாம். இடவசதி குறைவாக இருப்பின் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஒன்றியத்திற்கு ஒரு வட்டாரக் கல்வி அலுவலர் (பணிமூப்பில் உள்ளவர்) மட்டும் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.
கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து அலுவலர்களும் போதுமான சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது.
இணைப்பு:
கூட்டப் பொருள், படிவங்கள் 1- 21

தொடக்கக் கலது இயக்குநர்
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 2017
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ) முதன்மைக் கல்வி அலுவலர்கள்
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் }
வழியாக
நகல் :
1. தூசு முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-9 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
2. ஆணையர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-6 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
3. இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-6 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டப் பொருள்

1 2020 – 21ஆம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்ட விவரம் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 4577/ஜெ2/ 2020, நாள். 13.08.2020) (படிவம் 1-4)

2. 2361 அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி | யு.கே.ஜி வகுப்புகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்ட விவரம் (அரசாணை எண்.89, SW&NMP(SW-7(1) Dept, நாள்:11.12.2018) (படிவம் - 5)

3. 2020 - 21ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி / யு.கே.ஜி மற்றும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சேர்க்கை செய்யப்பட்ட மாணாக்கர் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விவரம் (படிவம் - 6)

4. 2361 அரசு / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளில் 2020 21ஆம் கல்வியாண்டில் சேர்க்கை செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை சென்றடைந்த விவரத்தை EMISல் பதிவு செய்யப்பட்ட விவரம் 5. கல்வித் தொலைக்காட்சி மற்றும் பிற தொலைக்காட்சி சேனல்களில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்காக ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை நகல் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு வழங்கிய விவரம் (படிவம் - 7)

6. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி கட்டிடங்களில் சிறப்பு மராமத்து பணிகள் (Special Repair Works) மேற்கொள்வது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அளிக்கப்பட்ட விவரம். (ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அவர்களுக்கு தொ.க.இ அவர்களால் அனுப்பப்பட்ட கடித ந.க.எண்.011392 கே4/2017, நாள்.18.12.2019) (படிவம் - 8)

7. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத பாதுகாப்பற்ற இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் (To be demolished buildings) சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரம் (ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அவர்களுக்கு தொ.க.இ அவர்களால் அனுப்பப்பட்ட கடித நகாண்.011392/கே4/2017, நாள்.18.12.2019) (படிவம் - 9)
8. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சுற்றுச் சுவர் (Compound wall) கட்டப்பட்ட விவரம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்படுவதை பார்வையிட்ட விவரம் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நக.எண். 011392/ கே4/ 2017, நாள். 18.12.2019 மற்றும் 06.03.2020) (படிவம் - 10)

9. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் (Additional Class Room) கட்டுதல் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரம் (ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அவர்களுக்கு தொ.க.இ அவர்களால் அனுப்பப்பட்ட கடித ந.க.எண்.016199/ கே4/ 2018, நாள்.06.03.2020) (படிவம் - 11)

10. குடிநீர் வசதி / கழிப்பிட வசதிகள் (Additional drinking water, Toilet facilities) கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் (படிவம் - 12) |

11 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தூய்மை செய்வதற்கு அரசாணை எண்.151, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி (சிஜிஎஸ்1) துறை, நாள் 30.11.2015 மற்றும் அரசாணை எண்.166, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (எம்.ஏ4) துறை நாள்.23.11.2015ன் படி நியமனம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்ந்து ஆய்வு செய்த விவரம்

12. தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் சார்பான மாநில கணக்காயர் தணிக்கை தடைகள் (AG audit pending Paras) நிலுவைப் பத்திகளை நீக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரம். (படிவம் - 13)

13. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாதம் ஒரு முறை ஆய்வுக் கூட்டம் (Review Meeting) முதன்மைக் கல்வி அலுவலர்களால் நடத்தப்பட்ட விவரம்

14. வட்டாரக் கல்வி அலுவலகங்களை CEOs, DEOS முன்னறிவிப்பின்றி பார்வையிட்ட (BEOs Office Surprise Visit) விவரம் மற்றும் ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட்ட விவரம் (படிவம் - 14) 15. தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் சார்பான நீதிமன்ற வழக்குகள் (Contempt Case, DCA, WP, WA மற்றும் SLP) ஆய்வு செய்யப்பட்ட விவரம் (படிவம் 15 - 19)

16. ஈராசிரியர் பள்ளிகளில் கடந்தாண்டு மாறுதல் பெற்று விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல்

1. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்தல் சார்பாக கூட்டமர்வு நடத்தப்பட்ட விவரம் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 1907 / இ1 2020, நாள். 05.09.2020)

18. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2019-20ஆம் ஆண்டு மாணாக்கர் எண்ணிக்கையின்படி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்த விவரம் (படிவம் 20 & 21

19. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்குதல் - கருத்துருக்களை முழுமையான வடிவில் பரிந்துரை செய்தல்

20. புதிய மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் துவங்குதல் கருத்துருக்களை முழுமையான வடிவில் பரிந்துரை செய்தல்
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews