மாநகராட்சியில், இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு கல்வித்தகுதியில் இருந்து, தமிழக அரசு விலக்களித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு துறைகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களின் கல்வித்தகுதி, எஸ்.எஸ்.எல்.சி., என உள்ளது.மாநகராட்சியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களின் கல்வி தகுதி மட்டும், பிளஸ் 2 மற்றும் தட்டச்சு தேர்ச்சி என இருந்தது.இதை மாற்றம் செய்யக் கோரி, தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது.
சமீபத்தில், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பாஸ்கரனை சந்தித்து, கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, 1996ம் ஆண்டைய பணி விதிகளை திருத்தம் செய்து, மாநகராட்சி இளநிலை உதவியாளர்களின் கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி.,என குறிப்பிட்டு, புதிதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறுகையில், 'இனி, அடிப்படை பணியாளர்களும், இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு பெற முடியும். 'கருணை அடிப்படையிலான பணி நியமனமாக இருந்தாலும், இளநிலை உதவியாளர்களாக நியமிக்க முடியும். இந்த உத்தரவு, மாநகராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பிரிவினருக்கும் பயன் அளிக்கும்' என்றனர்.
- நமது நிருபர் -
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups