மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க. எண். 4828 / இ1/ 2020, நாள் :25.08.2020
குறிப்பாணை
பொருள் :
மேல்நிலைக்கல்விப்பணி- மதுரை , முதன்மைக்கல்வி அலுவலரின் 25.08.2020 நாளிட்ட பள்ளிப்பார்வை- வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகை புரியாமை- விளக்கம் கோருதல்- சார்பாக,
மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் பள்ளிப்பார்வை நாள் 25.08.2020.
பார்வை:
மதுரை முதன்மைக்கல்வி அலுவலரால் 25.08.2020 அன்று வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பார்வையிடப்பட்டது. பார்வையின்போது தொழிற்கல்வி ஆசிரியர் திரு. ப.சேதுராமன் என்பார் மட்டும் பள்ளியில் பணியில் இருந்துள்ளார். தலைமையாசிரியர் மற்றும் கழற்சிமுறையில் பணியாற்ற வேண்டிய ஆசிரியர்கள் எவரும் வருகை புரியவில்லை என கண்டறியப்பட்டது. இப்பள்ளியில் 25.08.2020 அன்று தலைமையாசிரியர் மற்றும் பணி ஒதுக்கீடு ஆசிரியர்கள் பணிக்கு எவ்வித முன்னறிவிப்பு இன்றி வராத காரணத்தினால் அவ்வாசிரியர்களின் ஊதியத்தினை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என்பதற்கும் அரசுப்பணியாளர்கள் நன்னடத்தை விதிகளின் படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கும் உரிய விளக்கத்தினை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இக்கடிதம் கண்ட இரு தினங்களுக்குள் எழுத்துப்பூர்வமான கடிதத்தினை மதுரை முதன்மைக்கல்வி அலுவலரிடம் நேரில் அளித்திட தெரிவிக்கப்படுகிறது. இரு தினங்களுக்குள் விளக்கக்கடிதம் கிடைக்கப் பெறாவிடில் விளக்கம் அளிக்க ஏதும் இல்லை என கருதி மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இக்கடிதத்தினை அனைத்து ஆசிரியர்களுக்கும் சார்பு செய்து ஆசிரியர்களின் ஒப்புதல் பெறப்படவேண்டும். வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு மற்றும் கழற்சிமுறையில் பணிபுரிய, தலைமையாசிரியரால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக ஆணையுடன் தலைமையாசிரியர் வருகைபுரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், மதுரை.
பெறுநர்
தலைமையாசிரியர்.
அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளலூர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U