சம்பளம் ஒரே தேதியில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? PTT ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 29, 2020

சம்பளம் ஒரே தேதியில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? PTT ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10 கல்விஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையானது சர்வ சிக்சா அபியான் மூலம் மாணவர்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்கி வருகிறது. இது தற்போது சமக்ர சிக்சா என பெயர் மாறிவிட்டது. உடற்கல்வி ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களை 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதற்கான ஆசிரியர்கள் பகுதிநேரப் பணியில் நியமிக்கப்பட்டார்கள். இதில் தமிழகத்தில் 2011 – 2012 ஆம் கல்வியாண்டில் மார்ச் மாதம் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. முதன்முதலாக 2014ம் ஆண்டு ரூ.2ஆயிரம் உயர்த்தி தொகுப்பூதியம் ரூ.7ஆயிரமானது. பின்னர் 2017 ஆம் ஆண்டு ரூ.700 உயர்த்தி தொகுப்பூதியம் ரூ.7ஆயிரத்து 700 ஆனது. இதன் பின்னர் ஊதியம் உயர்த்தவில்லை. இவர்களின் சம்பளமானது இசிஸ் முறையில் வழங்கப்படுவதாக சொன்னாலும் மாதம் முதல் தேதியில் கிடைப்பதில்லை என தெரிகிறது. 10 ஆண்டுகளாக பணிபுரியும்போதும் மாநிலம் முழுவதும் ஒரே தேதியில் பகுதிநேர ஆசிரியர்கள் சம்பளத்தை பெற முடியாத நிலையை அரசு மாற்ற வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் இதர பணியார்களுடன் இணைத்து பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது :- மாண்புமிகு அம்மா மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 16549 பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தார். வேலைநிறுத்த காலங்களில் அரசுக்கு உறுதுணையாக இருந்தோம். இன்றளவும் பகுதிநேரம் என்பதை தாண்டி பள்ளிப்பணிகளில் எல்லாவகையிலும் முழுஅளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறோம். எங்களில் மரணம், பணிஓய்வு என சுமாராக 5ஆயிரம் காலியிடங்கள் போக எஞ்சிய 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை ரூ.7700 தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி புதுவாழ்வு கொடுங்கள். பணிநிரந்தரம் செய்வதற்கு கமிட்டி அமைக்கப்படும் என்ற 2017ஆம் ஆண்டு சட்டசபை அறிவிப்பை அமுல்செய்ய வேண்டும் என்றார். தொடர்புக்கு :- செந்தில்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு செல் 9487257203 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews