இந்தி மொழி குறித்த பள்ளி விண்ணப்பம் போலியானது என கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷர்வன் குமார் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி முறை இடம் பெற்றிருப்பது வேதனை அளிப்பதாகவும், தமிழகத்தில் மும்மொழிக் கல்விக்கு இடமில்லை என்று தெரிவித்தார். தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாகவெளிப்படுத்தியுள்ளனர். தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம்பெற்றிருந்தாலும், அம்மாவின் அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்திருந்தார்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
இந்த நிலையில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிவத்தில், மூன்றாவது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என்ற கேள்வி இடம் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த விண்ணப்பம் போலியானது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார், இந்த மாதிரி விண்ணப்பத்தை எந்த பள்ளிகளிலும் விநியோகிக்கவில்லை. இந்தி மொழி படிக்க விருப்பமா என்ற கேள்வி தற்போதைய மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இடம்பெறவில்லை. அந்த விண்ணப்ப படிவம் நான் பதவியேற்ற பின்பு வெளியிடப்படவில்லை. நான் இதை கொடுக்க உத்தரவிட்டிருந்தால் எல்லா பள்ளிகளிலும் இந்த விண்ணப்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லை. இந்த விண்ணப்பம் போலியானது, எனத் தெரிவித்துள்ளார்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups