31.08.2020 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு இனையதள வகுப்புகளை தொடங்க கல்லூரிக் கல்வித் துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 27, 2020

31.08.2020 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு இனையதள வகுப்புகளை தொடங்க கல்லூரிக் கல்வித் துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லூரிக் கல்வித் துறை
நகாண்.538/எம்12020 நாள் 26.08.2020
அய்யா அம்மையிர்,
பொருள்: கல்லூரிக் கல்வித் துறை - 2020-2-ம் கல்வியாண்டு - இளங்கலை மாணவர் சேர்க்கை - நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக, பார்வை:
1. அரசாணை (வாலாயம்) எண்.77, உயர் கல்வித்தித்துறை நாள், 18.07.2020,
2 அரசாணை (வாலாயம்) எண்.7, உயர் கல்வித்திதுறை நாள். 18.07.2020,
3. இவ்வலுவலக கடித நக எண்.5738/எம்.12020 நாள்.07.08.2020,
2020-21-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையினை துரிதப்படுத்தும் விதமாக, இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு பாடங்களை போதிப்பதற்கு ஏதுவாக மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை ( தர வரிசை மற்றும் தெரிவு பட்டியல் வெளியிட்டு மாணவர் சேர்க்கையினை உறுதிப்படுத்துதல்) உடனடியாக மேற்கொள்ளுமாறும், 31.08.2020 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு இனையள வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். கல்லூரி முதல்வர்கள் 2020-21-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விவரங்களை பாடவாரியாக அந்தந்த மண்டல இணை இயக்குநர்களுக்கு ஒவ்வொரு நாளும் ( Daily Repeam ) தெரிவிக்க வேண்டும். அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களும் மாணவர் சேர்க்கை தொடர்பாக உரிய அறிவுரைகளை அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிவித்து அன்றாடம் சேர்க்கப்படும் மாணவர்கள் குறித்த எண்ணிக்கையை ஒருங்கிணைத்து ( Consolidated ) Excell வடிவில் இவ்வலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த கல்வியாண்டில் (2019-2020) பெறப்பட்ட கல்விக் கட்டணத்தையே நடப்பு (2020- 2021) கல்வியாண்டியும் மாணவர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கலாகிறது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் 31-ம் தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் தங்களுக்கான சேர்க்கையை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதிக்குள்ளாக சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று உறுதி செய்ய மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள், தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய செப்டம்பர் 4-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும் உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், கல்விக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews