யுபிஎஸ்சி தேர்வுக்கான ஓராண்டு கால அட்டவணை வெளியீடு ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கு ஜூன் 27ல் முதல்நிலை தேர்வு: மெயின் தேர்வு செப்டம்பர் 17ல் தேதி தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 18, 2020

Comments:0

யுபிஎஸ்சி தேர்வுக்கான ஓராண்டு கால அட்டவணை வெளியீடு ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கு ஜூன் 27ல் முதல்நிலை தேர்வு: மெயின் தேர்வு செப்டம்பர் 17ல் தேதி தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுக்கான கால அட்டவணையை நேற்று வெளியிட்டது. அடுத்த ஆண்டு (2021) நடைபெற உள்ள தேர்வுக்கான கால அட்டவணையை யுபிஎஸ்சி www.upsc.gov.in இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. மொத்தம் 23 தேர்வுகள் நடைபெற உள்ளது. அந்த போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, எழுத்துத்தேர்வு நாள் ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஒருங்கிணைந்த ஜியோ சயின்டிஸ்ட்(முதல்நிலை தேர்வு) தேர்வு பிப்ரவரி 21ம் தேதி நடக்கிறது. சிஐஎஸ்எப் உதவி கமாண்டன்ட் (நிர்வாகம்) தேர்வு மார்ச் 14ம் தேதி நடக்கிறது. சிவில் சர்வீஸ்(ஐஏஎஸ், ஐ.பிஎஸ் உள்ளிட்ட பணிகள்) முதல்நிலை தேர்வு மற்றும் இந்திய வனப்பணி அதிகாரி(ஐஎப்எஸ்) முதல்நிலை தேர்வுகள் ஜூன் 27ம் தேதியும் நடக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வு, ஐஎப்எஸ் பதவியில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வெளியிடப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 2ம் தேதி கடைசி நாள். தொடர்ந்து சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு செப்டம்பர் 17ம் தேதியும், இந்திய வனப்பணி அதிகாரிக்கான மெயின் தேர்வு நவம்பர் 21ம் தேதியும் நடக்கிறது. மத்திய போலீஸ் படை உதவி கமாண்டன்ட் தேர்வு ஆகஸ்ட் 8ம் தேதியும், ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு ஆகஸ்ட் 29ம் தேதியும் நடக்கிறது. இன்ஜினீயரிங் சர்வீஸ்(முதல்நிலை தேர்வு) ஜூலை 18, மெயின் தேர்வு அக்டோபர் 10ல் நடக்கிறது. இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: தேர்வுக்கு குறுகிய காலம் தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நேரடியாக வந்து படிக்க முடியாத நிலை தான் ஒவ்வொரு மாணவர்களுக்கும் உருவாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலமாக படிப்பது நல்லது. எனவே, நேரடியாக தான் வந்து படிக்க ேவண்டும் என்று இருக்காமல், நேரத்தை வீணடிக்காமல் ஆன்லைனில் படித்து தங்களை தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்குமோ? அப்போது தான் நேரடியாக படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டுக்கான(2020ம் ஆண்டு) சிவில் சர்வீஸ் தேர்வுக்கான மெயின் தேர்வே அடுத்த ஆண்டு ஜனவரி 8, 9, 10, 16, 17ம் தேதிகளில் தான் நடைபெற உள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான இந்திய வனப்பணி அலுவலர் பணிக்கான மெயின் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி தொடங்கி 10 நாட்கள் அதாவது, மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews