கல்வி, மின் கட்டணம், இன்சூரன்ஸ் பிரிமியத்துக்கும் உச்சவரம்பு: 1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் ஐ.டி. நோட்டீஸ்: வரி வசூலை அதிகரிக்க வருது அடுத்த அதிரடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 15, 2020

Comments:0

கல்வி, மின் கட்டணம், இன்சூரன்ஸ் பிரிமியத்துக்கும் உச்சவரம்பு: 1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் ஐ.டி. நோட்டீஸ்: வரி வசூலை அதிகரிக்க வருது அடுத்த அதிரடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
20,000க்கு மேல் ஓட்டல்பில், 1 லட்சத்துக்கு மேல் கல்விக்கட்டணம், 1 லட்சத்துக்கு மேல் நகை, வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவோரை கண்காணிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. வெளிப்படையான மற்றும் ஆன்லைன் மூலமான வரி விசாரணை வசதியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். வரும் செப்டம்பர் 25ல் இது நடைமுறைக்கு வருகிறது. அப்போது,நேர்மையாக வரி செலுத்துவோரை கவுவிக்கப்படுவார்கள் எனக்கூறிய பிரதமர், சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க நிலுவை வரிகளை செலுத்த மக்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நீண்டகால இலக்கு.
ஊரடங்கால் மத்திய அரசின் நேரடி வரி வசூல் குறைந்து விட்டது. இதனால், வரி வருவாய் ஆதாரங்களை மேலும் விஸ்தரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, வரி விதிப்பில்இருந்து தப்பிவிடாமல் இருக்க, அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் திட்டம் தற்போதும் அமலில் உள்ளது. இதன்படி,ரொக்கமாக 10 லட்சம் டெபாசிட், 1 லட்சத்துக்கும் மேலான கிரெடிட் கார்டு மற்றும் பண பரிவர்த்தனைகள்ஆகிவற்றை வங்கிகள், நிதி நிறுவனங்கள் வருமான வரித்துறைக்கு பகிர்ந்து வருகின்றன. இதுபோல், புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி கீழ்க்காணும் பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறைக்கு நிறுவனங்கள் தகவல் அளிக்க வேண்டி வரும். இதன்படி கல்விக்கட்டணம் அல்லது நன்கொடை ஆண்டுக்குஆண்டுக்கு 1 லட்சத்தை தாண்டினால், மின் கட்டணம் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கு மேல் செலுத்தியிருந்தால், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வணிக வகுப்பு விமான டிக்கெட்கள் வாங்கியிருந்தால், ஓட்டல் பில் 20,000க்கு மேல் செலுத்தியிருந்தால், 1 லட்சத்துக்கு மேல் நகை, வீட்டு உபயோக பொருட்கள், பெயிண்டிங்குகள், மார்பிள் உள்ளிட்டவை வாங்கியிருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இதுபோல், சொத்து வரி ஆண்டுக்கு 20,000க்கு மேல் இருந்தால், ஆயுள் காப்பீடு 50,000 மற்றும் மருத்துவ காப்பீடு 20,000க்கு மேல் இருந்தால், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் மற்றும், வங்கி லாக்கர் விவரங்கள் ஆகியவற்றையும் பகிர வேண்டும் என நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதுமட்டுமின்றி, வங்கி நடப்பு கணக்குகளில் 50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் அல்லது வரவு வைப்பது, பிற கணக்குகளில் 25 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்வது அல்லது வரவு வைப்பது ஆகியவை குறித்தும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டி வரும். மேலும் 40,000க்கு மேல் செலுத்தப்படும் வாடகை. 10 லட்சத்துக்கு மேல் கார் வாங்கினால், 50 லட்சத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் டிசிஎஸ் (தொகையை பெறும்போது வரியை சேர்த்து பெறுவது) பிடித்தம் செய்யப்படும். கணக்கு தாக்கல் செய்பவர்களாக இருந்தால் 1 கோடிக்கு மேல் பணம் எடுப்பது, கணக்கு தாக்கல் செய்யாதவர்களாக இருந்தால் 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுப்பதற்கு டிடிஎஸ் (செலுத்தப்படும் தொகையில்) வரி பிடித்தம் செய்யப்படும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. மேற்கண்ட செலவுகளை செய்வோர் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிவரும். இல்லையெனில், வருமான வரி நோட்டீஸ் வரும். கொரோனாவால் தொழில்துறைகள் நிறுவனங்கள் முடங்கியதால் வருவாய், வேலை இழந்து மக்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், வருமான வரியை அதிகரிக்க மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள இந்த திட்டம், மக்களிடையேயும், வர்த்தகர்கள், நிறுவனங்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காப்பீட்டை மறக்க வேண்டியதுதானா?: இன்றைய சூழ்நிலையில் மருத்துவக்காப்பீடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிக அவசியம். அதிலும், கொரோனா பரவல் இதன் தேவையை உணர்த்தி விட்டது. இதனால் குறைந்தது 5 லட்சத்துக்குக்கு மேல் காப்பீடு எடுத்தால்தான் ஓரளவு பலன் உண்டு. உதாரணமாக, 5 லட்சம் மருத்துவ காப்பீட்டுக்கு பிரீமியம் கணக்கீடு: குடும்பத்தலைவர் (வயது 50), மனைவி (45), மகன் (10), மகள் (5) ஆண்டு பிரீமியம் 30,496 குறைந்த பிரீமியமாக இருந்தால் கூட 20,000க்கு கீழ் கிடையாது. இவ்வாறு பிரீமியம் எடுத்தால் வருமான வரித்துறை உங்களை கண்காணிக்க துவங்கிவிடும். இதையெல்லாம் கண்காணிப்பாங்க:
* கொடை ஆண்டுக்கு 1 லட்சத்தை தாண்டினால்.
˜ * ஆண்டுக்கு 1 லட்சத்துக்கு மேலான மின் கட்டணங்கள்.
˜ * உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வணிக வகுப்பு விமான டிக்கெட்கள்.
˜ * வெளிநாட்டு பயணத்துக்கு 2 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால்.
˜ * 20,000க்கு மேல் உள்ள ஓட்டல் பில்கள்.
* 1 லட்சத்துக்கு மேல் நகை, வீட்டு உபயோக பொருட்கள்,பெயிண்டிங்குகள், மார்பிள் உள்ளிட்டவை வாங்குதல்.
˜* சொத்து வரி ஆண்டுக்கு 20,000க்கு மேல் இருந்தால்.
* ஆயுள் காப்பீடு 50,000 மற்றும் மருத்துவ காப்பீடு 20,000க்கு மேல் இருந்தால்.
˜ * இதுபோல் பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் மற்றும், வங்கி லாக்கர் விவரங்களும் வருமான வரித்துறைக்கு பகிரப்படும்.
* 40,000க்கு மேல் செலுத்தப்படும் வாடகை.
* 10 லட்சத்துக்கு மேல் கார் வாங்கினால், 50 லட்சத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் டிசிஎஸ் பிடித்தம்.
* கணக்கு தாக்கல் செய்பவர்களாக இருந்தால் 1 கோடிக்கு மேல் பணம் எடுப்பது, கணக்கு தாக்கல் செய்யாதவர்களாக இருந்தால் 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுப்பதற்கு டிடிஎஸ் பிடித்தம். 2 சவரனுக்கு மேல் நகை வாங்க முடியாது
மக்கள் வாங்க தயங்கும் அளவுக்கு தங்கம் விலை தாறுமாறாக எகிறி விட்டது.உதாரணமாக, நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் சவரன் 40,800. 2 சவரன் சேதாரம் செய்கூலி சேர்த்தால், எளிதாக நகை விலை ஒரு லட்சத்தை நெருங்கிவிடும். அதற்கு மேல் வாங்கினால் நிச்சயம் ஒரு லட்சத்தை தாண்டி விடும். சிறிய செயின் வாங்கினால் கூட 2 சவரன் வந்து விடும். எனவே, திருமணத்துக்கு நகை வாங்கும் சாதாரண மக்களை கூட இது பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews