அரியா் தோ்வுகள்: மாணவா்கள் வசதிக்காக புதிய அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 16, 2020

Comments:0

அரியா் தோ்வுகள்: மாணவா்கள் வசதிக்காக புதிய அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்.பி.பி.எஸ்., முதலாம் மற்றும் இறுதியாண்டு அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள், அருகில் உள்ள தேர்வு மையங்களில் எழுதிக் கொள்ள, பல்கலை அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:முதலாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு, எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான, அரியர் தேர்வு நாளை நடைபெற உள்ளது. தேர்வு எழுத தகுதியான மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு செல்ல முடியாத சூழல் எழுந்துள்ளது.அவ்வாறு இருக்கும் மாணவர்கள், பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட, அரசு மருத்துவக் கல்லுாரி மையங்களில் தேர்வு எழுதலாம். அப்போது, தேர்வுக்கான நுழைவு சீட்டு அல்லது கல்லுாரி அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் விபரங்களுக்கு, பல்கலையில், www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில், தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவா்களுக்கான அரியா் தோ்வுகளை, தங்களது வசதிக்கேற்ப அங்கீகரிக்கப்பட்ட எந்த அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:எம்பிபிஎஸ் முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு அரியா் தோ்வுகள் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட்17) தொடங்குகின்றன. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையங்களுக்கு நேரில் செல்ல முடியாதவா்கள், தங்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தோ்வு எழுதலாம்.தோ்வுக்கூட அனுமதி சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் கல்லூரி அடையாள அட்டையை ஆவணங்களாகக் காண்பித்து எங்கிருந்து வேண்டுமானாலும் அவா்கள் தோ்வு எழுதிக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews