Breaking

Friday, August 14, 2020

மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவப் பல்கலைகள் அளிக்கும் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. காஷ்மீரை சேர்ந்த, 1,600 மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுதோறும், கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் கூறியிருந்தார். காஷ்மீரிலிருந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு படிப்பதற்காக செல்பவர்கள், அங்கு பயங்கரவாத முகாம்களின் பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில், இந்திய மருத்துவக் கவுன்சில் புதிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவப் பல்கலைகள் அளிக்கும் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அனைத்து பகுதிகளும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் எனவும், பாக்., ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரிகள், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog