பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை இடைநின்ற மாணவர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் இலவசத் தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்துறையில் மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) புதிய படிப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டும் இவை செயல்பட்டு வருகின்றன. இதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கு நீண்ட கால மற்றும் குறுகிய காலத் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, இரண்டு செட் சீருடைகள், காலணி, மிதிவண்டி ஆகியவை வழங்கப்படும். எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவா்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது. இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இடைநின்ற மாணவர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அதைப் பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் கல்வித்துறையைச் சேர்ந்த மாவட்ட அளவிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாணவர்களைத் தொடர்புகொண்டு தகுதிக்கேற்ற வகையில் அவா்களைத் தொழிற்பயிற்சிகளில் சேர, உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான சோ்க்கை விரைவில் தொடங்கப்படும்''. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.