அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, முட்டை வழங்குவது எப்போது என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது.
'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலகட்டத் தில், மாணவர்களுக்கு முட்டை வழங்குவதால், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், முட்டையை பெற்றோரிடம் வழங்கலாம் என்றும், நீதிமன்றம் அறிவுறுத்திஉள்ளது.
இது குறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி மாணவர்களுக்கு, சத்துணவில் முட்டை மற்றும் மாணவியருக்கு, 'நாப்கின்' வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முட்டைகளை சமூக நலத்துறையும், நாப்கின்களை பள்ளி கல்வித் துறையும் வழங்குகின்றன. இவற்றை எப்படி வழங்குவது என்பது குறித்து, பள்ளி கல்வித் துறையுடன் ஆலோசித்த பின், அரசின் வழிகாட்டுதல்படி, விரைவில் முட்டை வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.