தொலைநிலை கல்வி அட்மிஷனுக்கு தடை - UGC - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 09, 2020

Comments:0

தொலைநிலை கல்வி அட்மிஷனுக்கு தடை - UGC

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் தொலைநிலை கல்விக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க பல்கலை மானிய குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பால் 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக முதல் கட்டமாக நேரடி கல்லுாரி வகுப்புகள் மற்றும் பல்கலைகளுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் நடத்தப்பட உள்ளது.தொலைநிலை கல்வியில் இந்த கல்வி ஆண்டு புதிய மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என பல்கலை மானிய குழு தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கைக்கான அனுமதியும் இன்னும் வழங்கப்படவில்லை.வரும் நாட்களில் கொரோனா பாதிப்புஎப்படி இருக்கும் என்பதை பொறுத்தே புதிய மாணவர் சேர்க்கைக்கான அனுமதி குறித்துபரிசீலிக்கப்படும் என யு.ஜி.சி. தரப்பில்கூறப்பட்டுள்ளது. அதேபோல கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் புதிதாக பாடப்பிரிவுகள் துவங்கவும் அனுமதிக்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews