இணைய வழி வாயிலாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் Excellence In Educational Leadership என்ற தலைப்பில் தலைமைத்துவம் பயிற்சியை அளித்தல் - அறிவுறுத்தல் – சார்பு CEO Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 22, 2020

Comments:0

இணைய வழி வாயிலாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் Excellence In Educational Leadership என்ற தலைப்பில் தலைமைத்துவம் பயிற்சியை அளித்தல் - அறிவுறுத்தல் – சார்பு CEO Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனுப்புநர்                                                                   
முனைவர் எஸ்.வின்சென்ட் டி பால்,
முதன்மைக் கல்வி அலுவலர்,
M.Sc.,M.Ed.,M.Phil.,Ph.D.,(Chem),Ph.D.,(Edu.Tech).,

பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலகம், முதல்வர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குமுளூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
ந.க.எண்.405/9/2020, நாள்: 20.07.2020 ஐயா / அம்மையீர்,

பொருள் : கல்வி -ஆசிரியர் கல்வி - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - குமுளூர் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் - இணைய வழி வாயிலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் Excellence In Educational Leadership என்ற தலைப்பில் தலைமைத்துவம் பயிற்சியை அளித்தல் - பங்கு பெற்று பயன்பெற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் – சார்பு.
கோவிட் - 19 காலக்கட்டத்தில் கற்றல் கற்பித்தல் தொடர்ந்து நடைபெறும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கீழ்கண்ட பல்வேறு இணையதள கருத்தரங்கம், பயிலரங்கம் நடைபெற்றுள்ளது.

1. Most Common Errors in English
2. Preposition to acquire perfect English
3. E-Content & Augmented Reality
4.Google Forms & Personal Blog Creation
5. Virtual Classroom - Learning Management System (MOODLE)
6. Online Faculty Development Programme on Educational Video Creation (E
Content Development)
7. Evaluative Techniques for Gen Z Learners
8. Managing Educational Data 9. Meta-Cognition for Meta Teacher's
இதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமைத்துவம் குறித்த இணைய வழி வாயிலாக Excellence In Educational Leadership பயிற்சி அளிக்க குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 22.07.2020 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர்கள் https://forms.gle/wgv9UeVCeBHa9Kpx6 இணைப்பு மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்த கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது .

பயிற்சி அன்று ஆசிரியர்களின் மின்னஞ்சலில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக லிங் (Link) அனுப்பி வைக்கப்படும். பயிற்சியில் உச்சமாக 250 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். ஆகவே, முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி நாளான்று e-mail-க்கு அனுப்பபடும் இணையதள லிங்கை (Link) பயிற்சி துவங்கும் பிற்பகல் 1.50 முதல் 2.00 மணிக்குள் Google meet உள் சென்று க்ளிக் செய்து பயிற்சியில் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்கள் பயன்பெற அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நகல்: சென்னை -06, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்தனுப்பலாகிறது. நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் இலால்குடி/முசிறி/திருச்சி/மணப்பாறை. நகல்: திருச்சிராப்பள்ளி மாவட்ட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews