மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ.பி.சி வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. தமிழக அரசு சார்பிலும் திமுக, அதிமுக கழகம் மற்றும் இடதுசாரிகள் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி செந்தில் குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
அப்போது மருத்துவ மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு கூடாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் விதி இருப்பதாக மத்திய அரசு வாதிட்டது. மேலும், தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசோ அந்ததந்த மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை வகுத்திருப்பதாக கூறியது. மத்திய அரசு கவுன்சிலின் நடத்தும் அமைப்பு மட்டுமே தவிர இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உண்டு என திமுக தரப்பு வாதிட்டது.
இதுதவிர அதிமுக, மதிமுக, பாட்டாளிகள் மக்கள் கட்சி மற்றும் இடதுசாரிகள் சார்பிலும் வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர். அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஓ.பி.சி இட ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. அதே நேரத்தில் திமுக நடத்தும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு தருமாறு தேசிய தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாத்திட குரல் கொடுக்குமாறு தலைவர்களை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இது போன்ற தீர்ப்பு விவரங் கள் ஏன் எதற்கு என்று கூட தெளிவு இல்லாத OBC மக்கள் உள்ளனர்
ReplyDelete