Breaking

Monday, July 20, 2020

கணக்கு தாக்கல் செய்யுங்க...! வருமான வரித்துறை பிரசாரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'வருமானவரி செலுத்துவோர், தாங்களாக முன்வந்து, கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்' என, வருமான வரித்துறை, மின்னணு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:வருமான வரி செலுத்துவோர், தாங்களாக முன்வந்து, வரி செலுத்தவும், அது தொடர்பான கணக்கு தாக்கல் செய்யவும் வலியுறுத்தி, மின்னணு பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரம், வரும், 31 வரை மேற்கொள்ளப்படும்.தங்களது நிதி பரிவர்த்தனைகளை சரிபார்த்துக் கொள்ளும்படி, வரி செலுத்துவோருக்கு, 'இ - மெயில்' மற்றும், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். வரி செலுத்துவோர், தங்கள் வரியை, ஆன்லைன் வாயிலாக மதிப்பீடு செய்யும் வசதியை ஏற்படுத்தி தருவது, இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம். வரி செலுத்துவோர், தங்களின் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் குறித்து, சம்பந்தப்பட்ட இணையதளத்தில் தெரிவிக்கலாம். அதிக நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்கு விபரங்களை தாக்கல் செய்யாதோரின் தகவல்கள், ஆய்வு செய்யப்படும். கணக்கு தாக்கலில் உள்ள குறைகளை, சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரிகளை சந்திக்காமல், ஆன்லைன் வாயிலாகவே சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog