சத்தியபாமா பல்கலை நுழைவு தேர்வு ரத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 14, 2020

Comments:0

சத்தியபாமா பல்கலை நுழைவு தேர்வு ரத்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில், இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, பல்கலை வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும், தற்போது கொரோனா தொற்றால், அசாதாரண சூழல் நிலவுகிறது. மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பு காரணமாக, சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில், இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்படுகிறது.மாணவ, மாணவியர், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில், தங்களுக்கு விருப்பமான இன்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம்.ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாணவ, மாணவியருக்கு, மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும். இதுதொடர்பாக, www.sathyabama.ac.in என்ற இணையதளம்; 99400 58263 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும், 1800 4251770 என்ற, கட்டணம் இல்லாத எண் வழியே தொடர்பு கொள்ளலாம். மேலும், admissions2020@www.sathyabama.ac.in என்ற, இ - மெயில் வழியாகவும், சந்தேகங்களுக்கு பதில் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews