ஒரு காட்டில் ஆந்தை ஒன்று இருந்தது. அதன் பெயர் மூதறிஞர் என்பது. அது ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்தியது காட்டிலுள்ள ஒவ்வொரு விலங்குகளும் பறவைகளும் அதனிடம் சென்று படித்தன. சில திங்கள் கடந்தன. மூதறிஞராகிய ஆந்தை அனைத்தையும் அழைத்து, அவற்றின் கல்வியறிவை ஆய்ந்தறிய எண்ணியது. அதன்படி ஒரு நாள் அஃது அவற்றை நோக்கிப் பல வினா வினவியது.
குயிலைப் பார்த்து, "இரவில் வானத்தில் நிலவு காய்வது ஏன்?” என்றது குயில் நான்- நிலவொளியில் இரவு முழுவதும் இனிமையாகப் பாடி என் மனைவியை மகிழ்விப்பதற்காக நிலவு காய்கிறது என்ற அதற் கடுத்தபடியாகக் குவளை மலர்கள் இருந்தன அவற்றைப் பார்த்து ஆந்தை அதே வினாவை வினாவியது. குவளை மலர்கள், "இரவில் மதி (சந்திரன்) ஒளி விடுவதற்குக் காரணம், எம் இதழ்கள் மலர்வதற்காக இருக்கலாம்; எம் இதழ்கள் மேல் அதற்கு அளவற்ற அன்பு; தம் ஒளிக்கதிர் களுக்கு எம் இதழ்கள் இனிய காட்சி விருந்தாகும்.
அடுத்திருந்த முயல் யாம் - காலையில் ஈர்ப்பதற்கான பனித்துளிகளை உண்டாக்கு வதற்காக மதி இரவில் தோன்றுகிறது" என்றார்
நாய், "திருடர்கள் என் தலைவர் இல்லத்தில் இரவில் திருட முயல்வார்கள். அதைத் தடுக்க யான் இரவில் வீட்டைச் சுற்றி வரவேண்டும். அதற்குப் போதிய வெளிச்சம் தேவை. அவ்வெளிச்சத்தைத் தருவதற்காக மதி இரவில் தோன்றுகிறது” என்றது.
மின்மினிப்பூச்சி, "தன் ஒளியை என்னிட மிருந்து பெறுவதற்காக இரவில் தோன்று கிறது என்றது
நரி, "நான் கோழிப் பண்ணைக்குச் செல்லும் வழியைத் தெளிவாக அறிதற்காக நிலவு இரவில் வானத்தில் தோன்றுகிறது" என்றார்
இவற்றைக் கேட்ட மூதறிஞராகிய ஆந்தை, போதும் நிறுத்துக; தோன்றுகிறது மதி வானத்தில் இயற்கையாகத் அதைத் தம்தம் ஆனால் நலத்துக்காகத் தோன்றுவதாகச் சொல்லுவதுதான் விந்தையாக இருக்கிறது எல்லாரிடத்திலும் தற்பெருமையே சிறந்து என்று சொல்லி அவற்றைக் கலைந்து செல்லுமாறு சொன்னது.
புலி, கிளை மான், முதலை
ஒரு பெரிய காடு. அக்காட்டில் புலி, கிளை மான், முதலை மூன்றும் வாழ்ந்தன. ஒரு நாள் கிளைமானுக்கு நாவறட்சி யுண்டாயிற்று. எனவே கிளைமான் அங்குள்ள நீரோடைக்கு வந்து
அந்நீரோடை அருகில் புதர் ஒன்று இருந்தது. அதில் புலி மறைந்திருந்தது. அது நீர் குடிக்க வந்த மானைப் பார்த்தது. அவ்வோடையில் ஒரு பெரிய முதலை இருந்தது. அது மானை விழுங்கக் கரையோரமாக வந்தது கிளைமான் நீரைக் குடித்து விட்டுத் திரும்பும் நேரம். புலி புதரிலிருந்து மானை நோக்கிப் பாய்ந்தது. என்னே இரங்கத் தக்க நிலை! புலி குறி தவறி ஓடையில் விழுந்தது. மானை விழுங்க எதிர் நோக்கி வந்த முதலை புலியின் காலைக் கௌவிப் பிடித்தது; நீருக்குள் இழுத்துச் சென்றது
மானுக்கோ சிறிது நேரம் ஒன்றும் விளங்க வில்லை . குலை (இருதயம்) விரைவாகத் துடித்தல்
ஐயோ இவ்வுலகில் இக் கொடிய விலங்குகள் இப்பொழுது நடந்த இம்முறையில் தமக்குள் கொன்று மடியா விட்டால், என்னைப் போன்ற வன்மையற்ற அடக்கமான உயிரிகள் உயிர் வாழ்வதென்பது முடியாத செயலே" என்று ஓடி மறைந்தது
திக்கற்றவனுக்கு இயற்கை துணை"

👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.