ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? பழமொழிக்கட்டுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 05, 2020

Comments:0

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? பழமொழிக்கட்டுரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆறறிவு படைத்த மாந்தர் தம் வாழ்வில் பெற்ற பட்டறிவே பழமொழிகள் உருவாகின்றன. பழமொழிகள் தமிழ் மக்களின் அறிவுச் சிந்தனையை வெளிப்படுத்துகின்றன. இவற்றை நாட்டுப்புற பாடல்களின் ஒரு கூறு என்றும் வழங்குவர். இலக்கிய நயமும், ஓசை நயமும் பெற்று விளங்குவதோடு எதுகை, மோனை, எள்ளல், வினா மற்றும் உவமைப் பழமொழிகள் எனப் பல்வகைகளில் வழங்கப் பட்டு வருகிறது. மேற்கண்ட பழமொழி வினா வகை யைச் சேர்ந்தது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா என்ற வினாவில் தொக்கி நிற்கும் நுண்பொருள் யாதெனக் கண்டு பயன் பெறு மா ஏடு என்றால் சுவடி, தாள் ஏட்டில் எழுதி வைத்தல் சுவடியில் எழுதி வைத்தல் அரிய கருத்துக்களை, செய்யுட்களை என்பது தொன்று தொட்டு வரும் மரபு. சுரைக்காய் என்பது காய் வகைகளுள் ஒன்று. கறி என்பதற்கு இரு பொருள் (மரக்கறி, மாமிசம்) இருந்தாலும் இங்கே சுரைக்காயை இணைத்துச் சொல்லியிருப்பதால் மரக்கறி எனப் பொருள் கொண்டு ஆராய்ந்தறிதல் வேண்டும். ஏடு அதாவது தான் என்பதற்கும் சுரைக்காயிற்கும் என்ன சம்பந்தம்? ஏட்டில் சுரைக்காய் என்று எழுதி வைத்தால் அது கறியாகுமா கறி - சமைத்து உண்ட ருசிதான் வருமா.? வராது. இதை உணர்த்தும் விதமாக 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா என்று வினாப் பழமொழியாக அமைக்கப்பட்டுள்ளது போலும் ஆனால் இப்பழமொழி இன்று பெரும்பாலும் 'கல்வியும் அதன் தன்மையை உணர்த்தும் வழியாகக் கையாளப்பட்டு வருதல் கண்கூடு. மேலும் ஏட்டறிவோடு அனுபவ அறிவு இல்லாத நிலையை உணர்த்தும் மொழி யாகவும் பொருந்தி வரும். இன்று எத்தனையோ ஆயிரம் இலட்சங்களைக் கொட்டிப் பயிலும் முதல் கல்வி முறை வாழ்க்கைக் கல்வியைத் தருகிறதா என்பதே கேள்வி குறிதான். உதாரணத்திற்கு ஒரு விவசாயி ஒரு குறிப்பிட்ட நிலத்தில் எத்தனை போகம் நெல் பயிரிடலாம்! அதற்கு விளையும் பயிர் அளவு தரம் முதலியவற்றை நிலத் தைப் பார்த்தவுடனேயே தெற்றெனக் கூறி நம்மை வியப் பிலாழ்த்துவான். ஆனால் அதே சமயம் விவசாயம் படித்த ஒரு இளைஞனை அழைத்து நாம் வினவிடும்போது அவன் தான் கற்ற கல்வியின் பயனால், சில வழிமுறை களைக் கையாண்டு கணக்கிட்டு கூறுவான். முதலாம வரின் கூற்றுக்கும் இரண்டாமவரின் கூற்றுக்குமிடையே அதிக வேறுபாடு இருக்காதெனினும் கால அளவில் மாற்றம் தெரியும். ஏட்டறிவை விட பட்டறிவு (அனுபவ அறிவு) மிகத் துல்லியமாகப் பளிச்சிடும். அதனால் தான் படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்லும்போது ஊதியம் குறைவாக இருக்கும். அனுபவம், ஏற.. ஏற மதிப்பும், மரியாதையும் உயர்வும் ஊதிய உயர்வும் அமையும். இதையெல்லாம் உள்ளடக்கிக் கூறி ஏட்டைப் படித்தாலும் ஏற்றம் பெற அனுபவ அறிவின் முதிர்ச்சி காண அறிவுறுத்தும் மொழியாக 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற வினாப் பழமொழி நமக்கு விடையைத் தேடி வாழ்க்கையில் வளம் பெறச் செய்யும் உயர்தனிச் செம்மொழி எனில் மிகையாமோ...? 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews