Breaking

Sunday, June 21, 2020

ஆன்லைனில் பாடம் கற்ற இளம்பெண் - தாய்க்கு அதிர்ச்சி.! கண்முன்னே மகள் செய்த விபரீதம்.!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செல்போனை நோண்டிக் கொண்டே இருந்த பள்ளி மாணவியை தாய் கண்டித்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரத்தில் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த குஞ்சிதபாதம் என்பவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மஞ்சு என்ற பெண் இருந்துள்ளார். தற்பொழுது ஊரடங்கு காரணமாக இணைய வழி கல்வியை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். அதுபோல மஞ்சுவும் நேற்று இரவு இணையவழி பாடத்தை செல்போனில் படித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது செல்போனில் பாடத்தை கவனிக்காமல் கேம் விளையாடு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த மஞ்சுவின் தாய் மஞ்சுவை கண்டித்துள்ளார். அதன் பின்னர் அருகில் இருந்த கடைக்கு சென்றிருந்தார். அப்பொழுது மனமுடைந்த மஞ்சு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடைக்கு சென்று திரும்பிய தாய் கதவை திறந்து பார்த்தபோது மஞ்சு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மஞ்சு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog