Breaking

Sunday, June 21, 2020

கொரோனாவை 80 % வரை குணப்படுத்தும் ஃபேவிபிராவிர் மருந்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுப்பதற்காக மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கிளென்மார்க் நிறுவனம் ஃபேவிபிராவிர் (ஃபேவிபுளு) என்ற மருந்தை தயாரித்துள்ளது. கொரோனா பாதிப்பு லேசாக உள்ளவர்கள் மற்றும் அபாயக் கட்டத்தை எட்டாதவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்ததில் 80% வரை நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கிறது. இந்த மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான அனுமதியை டி.சி.ஜி.ஐ. வழங்கியுள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கிவிட்டதால் இந்தியா முழுவதும் இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரக்கூடும் எனத் தெரிகிறது. மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 என நிர்ணயிக்கப்படுள்ளதால் 34 மாத்திரைகள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குவதால் இந்த மருந்தின் தேவை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதால் ஃபேவிபிராவிர் மாத்திரை அனைத்து மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும். ஆனால் மருத்துவர் சீட்டு இல்லாமல் இந்த மருந்தை யாரும் பெற முடியாது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog