தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் உள்ளிட்ட அலுவலகங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதை அடுத்து, தமிழகத்தில் 19ம் தேதி முதல் 30ம் தேதிவரை 12 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள் முழுவதுமாக ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதன்பேரில், மேற்கண்ட பகுதிகளில் இயங்கும் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் அலுவலகங்கள், துறைகள், உறுப்பு கல்லூரிகள், மீண்டும் மூடப்படுகிறது. அண்ணா பல்கலைக் கழக அலுவலர்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், அனைத்து பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆன்லைன் மூலம் நடத்தும் வகுப்புகளை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதே போல செல்போன் செயலிகள் மூலம் மாணவர்களுக்கு தேவையான பாடக் குறிப்புகளை அனுப்ப வேண்டும். ஆய்வு மாணவர்களை பொறுத்தவரையில் மறு உத்தரவு வரும் வரை வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில், அண்ணா பல்கலைக் கழக தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் தொழில் நுட்பம் அல்லாத துறையை சேர்ந்தவர்கள் தேவைப்படும் போது சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அணுக வசதியாக இருக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அனைத்து, அண்ணா பல்கலைக் கழக வளாக டீன்கள், மண்டல வளாக டீன்கள், உறுப்புக் கல்லூரிகளை சேர்ந்த முதல்வர், இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கொரோனா தடுப்புக்கான அரசு வெளியிட்ட விதிகளை பின்பற்றி சுகாதாரம் மற்றும் தூய்மை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.