பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 13, 2020

Comments:0

பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனாதீவிரம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என முதல் வர் எடப்பாடி பழனிசாமிகூறினார். சேலம் மாவட்டம் , மேட்டூர் அணையில் இருந்து நேற்று , டெல்டா பாசனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்டபள்ளியில் இவ்வளவுகட்டணம் , கட்டச்சொல் கிறார்கள் என பெற்றோர் புகார் கொடுத்தால் தான் , அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும். முதலமைச்சராகிய நானே தெரிவிக்கிறேன் . பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் , அவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் , அந்தப் பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . பள்ளிகளை திறப்பது குறித்து , மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப் பட்ட பிறகு , பள்ளிகள் படிப்படி யாக திறக்கப்படும். கொரோனா தொற்று இருக்கும்போது , இதை அறிவித்தால் பிரச்னைகள் வரும். எனவே , தொற்று படிப்படியாக குறைக்கப்பட்ட பின் , கல்வி சம்பந்தப்பட்ட பிரச்னைகளையெல்லாம் ஆராய்ந்து அரசு முடிவு செய்து அறிவிக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். அதன்பின்னர் பேசிய அவர், மேட்டூர் அணை தொடர்ந்து 399 நாள்களுக்கு மேலாக 100 அடிக்கு குறையாமல் உள்ளது என்றும், நீர்திறப்பு மூலம் 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவித்தார். முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் 38 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று கூறிய முதல்வர், தண்ணீர் வீணாவதை தடுக்க பாசன பகுதிகளை அதிகரிக்க நடவடிக்கை ற்கொள்ளப்படும் என்று கூறினார். சமீபத்தில் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் சரியான பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்ற கேள்விக்கு முதல்வர் பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தவறான தகவல் பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேட்டூர் அணையைத் திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி, சென்னை முழு ஊரடங்கு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அளித்த பதில்: ''சென்னையில் தொற்று அதிகமான நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சொல்கிறார்கள். ஊரடங்கை மேலும் கடுமையாக்கப்படும் என்கிற செய்தி தவறான செய்தி. அவ்வாறு என் பெயரில் வெளிவந்த செய்தி தவறானது. அப்படித் தகவல் வெளியிட்டவர்கள், பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. 87 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். குறுகலான பகுதி. இதனால்தான் தொற்று எளிதாகப் பரவும். இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுப் பணிகள் நடக்கின்றன. இதைக் கண்காணிக்க 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 அமைச்சர்கள் கண்காணிக்கிறார்கள். இது ஒரு புது நோய். இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அரசு அறிவிக்கும் வழிமுறைகளைக் கட்டாயம் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் இதனால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளிலேயே உயிரிழப்பும், நோய்த்தொற்றும் அதிகம் இருக்கிறது. சாதாரண மக்கள் வாழும் தமிழகத்தில் கட்டுப்பாடுடன் வைத்திருக்கிறோம். ஊடகத்தின் வாயிலாக தினந்தோறும் விழிப்புணர்வு , வழிகாட்டுதல்களைத் தெரிவித்து வருகிறோம். ஆனால், மக்கள் அதைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். நான் வரும்போது பலரையும் பார்க்கிறேன். யாருமே முகக்கவசம் அணியவில்லை. விழிப்புணர்வுப் படம் எடுத்து வெளியிட்டோம். அதை மக்கள் பார்க்கிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் அதைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். பொதுமக்களுக்குக் குறிப்பாக சென்னை மக்களுக்குக் கோரிக்கை வைக்கிறோம். அரசு அறிவிக்கின்ற நடைமுறைகளைப் பின்பற்றுங்கள். எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன. நோய் யாருக்கும் வரும் என்றே தெரியவில்லை. அனைவருக்கும் வந்துள்ளது. பிரிட்டன் பிரதமருக்கே வந்தது. நமது சட்டப்பேரவை உறுப்பினரே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதான ஒரு நோய். ஆகவே, பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது''. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும். 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன என கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews