Search This Blog
Monday, May 18, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பரீட்சை என்பதே மன உளைச்சல் தான் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜூன் 1 முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜுன் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்காக மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெளிமாவட்டங்களில் உள்ள மாணவர்கள் சொந்த ஊருக்கு எப்படி திரும்புவர், மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதுவார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பரீட்சை என்பதே மன உளைச்சல்தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும் எனத் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தேர்வுகள் என்பதே மன உளைச்சல்தான்... - நடிகர் விவேக் ஆதங்கம்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.