ரூ. 20 லட்சம் கோடி !! மத்திய நிதி அமைச்சர் 2 - ம் கட்டமாக அறிவித்த திட்டங்கள் என்னென்ன ? முழு விபரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 14, 2020

Comments:0

ரூ. 20 லட்சம் கோடி !! மத்திய நிதி அமைச்சர் 2 - ம் கட்டமாக அறிவித்த திட்டங்கள் என்னென்ன ? முழு விபரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் குறித்து 2 வது நாளாக அறிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். அதில் ; சுமார் 4.22 லட்சம் கோடி அளவிற்கு கடந்த 3 மாதங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிக்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டியை செலுத்த அவகாசம் மார்ச் 1 ம் தேதியில் இருந்து மே 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ரூபாய் கடன் வரம்புடன் விவசாயிகளுக்கு சுமார் 25 லட்சம் கிசான் கிரடிட் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 கோடி விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன. நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஊரக உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நிதி ரூ.4200 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊரக உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நிதி ரூ.4,200 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் முதல் வேளான் உற்பத்தி திட்டங்களுக்காக மாநில அரசுகளின் நிறுவனங்களுக்கு ரூ.6,700 கோடி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 15 ம் தேதிக்கு பிறகு 7200 புதிய மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12,000 சுய உதவி குழுவினர் மூலம் 3 கோடி மாஸ்க்குகள் மற்றும் 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரித்து விநியோகம். இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் தற்போதைய செலவு மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி. மே 13 ம் தேதி வரை 14.62 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் , 40 முதல் 50 சதவிகிதம் பேருக்கு கூடுதலாக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுதாய பாதுகாப்பு நிதியின் பயனாளிகளாக அமைப்பு சாரா தொழிலாளர்களும் சேர்ப்பு. தேசிய அளவில் ஒரே மாதிரியான ஊதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 10 தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனத்திலும் இ.எஸ்.ஐ.சி திட்டம் நீட்டிப்பு அனைத்து தொழில்களிலும் , வேலைகளிலும் பெண்கள் ஈடுபடலாம். உரிய பாதுகாப்புடன் இரவுப் பணியில் ஈடுபடலாம்.. 5 ஆண்டுகளுக்கு பதில் , ஓராண்டு பணியாற்றினாலும் தொழிலாளர்களுக்கு கிராஜிவிட்டி வழங்க நடவடிக்கை. தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய தேசிய அளவில் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ESIC சேவையை விரிவுப்படுத்த நடவடிக்கை. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரே நாடு , ஒரே ரேசன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
அரசு - தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும். குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள் , அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும். சாலையோர வியாபாரிகள் எளிதாக கடன் பெற விரைவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.10 ஆயிரம் துவக்க நிலை செயல்பாட்டு மூலதனத்துடன் சாலையோர வியாபாரிகளுக்கு கடன். வேலை வாய்ப்பை ஊக்குவிக்க சிஏஎம்பிஏ நிதிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு. சிஏஎம்பிஏ நிதி மூலம் நகர்புற , புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் வேலை வாய்ப்பு உருவாகும். வீட்டுக்கடனுக்கு மானியம் வழங்க மற்றும் வீட்டு வசதி துறையை மேம்படுத்த ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. வீட்டுக் கடன் மானியத் திட்டத்தின் மூலம் 3.3 லட்சம் நடுத்தர குடும்பம் பயன் அடையும். கிஷான் கிரடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுடன் , மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் சேர்ப்பு. ரூ 20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டத்திற்கான 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.
அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில், ரூ.5.94 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்திருந்தார். மேலும், இந்த அறிவிப்பில் சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டங்கள் இருந்தது.
குறிப்பாக சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது வெளியிட்டு வருகிறார்.
இன்றைய அறிவிப்புகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
கடனுதவி பெற்ற விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 மாதமாக நீட்டிப்பு.
கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் சிறிய விவசாயிகள் சுலபமாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கோடி விவசாயிகளுக்கு 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது.
சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ம் தேதி வரை தள்ளுபடி.
கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 86 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பிலான 63 லட்ச கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 29 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும், உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.4,200 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் மற்றும் 1.2 லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு 3 வேலை உணவு வழங்கப்படுகிறது.
100 நாள் வேலைத்திட்டத்தின் மூலமாக மே 13 ஆம் தேதி வரை 14.62 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 இல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதத்தை விட, நடப்பு மே மாதத்தில் 40-50% வரை கூடுதலான மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் ஆகஸ்ட் மாதத்துக்குள் 83% அமல்படுத்தப்படும்
அரிசி அல்லது கோதுமை அடுத்த இரண்டு மாதங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews