Search This Blog
Wednesday, May 13, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.அப்போது அவர் கூறுகையில், 'சுயசார்பு இந்தியா' என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா தன்னிறைவு பெறுவதுடன், உலக நாடுகளுக்கும் உதவும் வகையில் இந்த திட்டங்கள் இருக்கும். தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.தன்னிறைவு இந்தியாவை நோக்கி இந்த திட்டங்கள் இருக்கும். உள்ளூர் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி மோடி நேற்று அறிவிப்புகளை வெளியிட்டார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்கள் எந்த வகைகளில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து புது தில்லியில் இன்று நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி நேற்று அறிவித்தாா். கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி நேற்று 8 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.அப்போது அவர் கூறுகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும். இது விவசாயிகள், தொழிலாளா்கள், நோ்மையாக வரி செலுத்தும் நடுத்தர மக்கள், குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும். இது தொடா்பான முழு விவரத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவிப்பாா் என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார்
சிறு, குறு தொழில்துறைக்கு 6 முக்கிய அறிவிப்புகள்: பிணையில்லா கடனுதவி.
இந்திய நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்துறையினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 6 சலுகைகளை அறிவித்துள்ளார்.புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது,சிறு, குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்படும்.இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு நிறுவனங்கள் அக்டோபர் 31ம் தேதி வரை கடன் உதவி பெறலாம்.இந்த 3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தின் மூலம் சுமார் 45 லட்சம் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் பலனடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.100 கோடி அளவுக்கு வியாபாரம் செய்யும் சிறு,குறு நிறுவனங்களுக்கு, ரூ.25 கோடி அளவுக்கு மட்டுமே கடன் நிலுவையில் இருக்கும்பட்சத்தில் கூடுதலாக இந்த கடன் உதவியைப் பெறலாம்.புதிய கடன் வசதியைப் பெற சொத்துப் பத்திரங்கள் போன்ற எந்த பிணையும் தரப்பட வேண்டாம்.மேலும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறை மாற்றியமைக்கப்படுகிறது. முதலீட்டு உச்ச வரம்பு மாற்றியமைக்கப்படுவதால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பலனடையும்.நிதி உதவி தேவைப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி துணைக் கடன் வழங்கப்படும்.பொதுமுடக்க காலத்தில் நலிவடைந்த சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு கடன் வழங்குவதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பலன் பெறும்.நிதிக்குள் நிதி என்ற அடிப்படையல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி மூலதன நிதி வழங்கப்படும்.சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும். மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கடனுதவியை 4 ஆண்டுகளுக்கு தவணையாக திரும்ப செலுத்தலாம். முதல் ஆண்டில் தவணை வசூலிக்கப்படாது என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி இல்லை.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி இல்லை என்றும் இது சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு இந்தியா திட்டம் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விவரித்து வருகிறார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 6 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. இதுபற்றி தெரிவித்ததாவது:\"ஒப்பந்தப்புள்ளியைப் பெறுவதில் இந்தியாவின் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடுவது நியாயமற்ற போட்டியாக உள்ளது. எனவே, அரசு கொள்முதல் தொடர்பான ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. இதற்கான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.இது 'சுயசார்பு இந்தியா' திட்டத்தை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கையாகும். அதேசமயம், உள்நாட்டு தயாரிப்புத் திட்டத்துக்கும் இது உதவும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவும்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பில் மாற்றம்
கரோனா நோய்த்தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். அதன்படி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் இது மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான சட்டத் திருத்தங்களும் விரைவில் மேற்கொள்ளப்படும். குறு தொழில் நிறுவனங்கள்ரூ. 1 கோடிக்கு குறைவாக முதலீடு செய்யும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் குறு தொழில் நிறுவனங்களாக வரையறுக்கப்படும். நிறுவனத்தின் வருமானம் ரூ. 5 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும். சிறு நிறுவனங்கள்ரூ. 10 கோடிக்கு குறைவாக முதலீடு செய்யும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் சிறு தொழில் நிறுவனங்களாக வரையறுக்கப்படும். நிறுவனத்தின் வருமானம் ரூ. 50 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும். நடுத்தர நிறுவனங்கள்ரூ. 20 கோடிக்கு குறைவாக முதலீடு செய்யும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களாக வரையறுக்கப்படும். நிறுவனத்தின் வருமானம் ரூ. 100 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும்
அடுத்த 3 மாதங்களுக்கும் பி.எஃப். தொகையை அரசே செலுத்தும்: நிர்மலா சீதாராமன்..
அடுத்த 3 மாதங்களுக்கும் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையையும் (பி.எஃப்.) மத்திய அரசே செலுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கும், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு பி.எஃப். தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், மீண்டும் அடுத்த 3 மாதங்களுக்குமான பி.எஃப். தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளார்.வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும் என்றும், ஏற்கனவே 3 மாதங்களுக்கு பிஎஃப் சந்தாவை அரசு செலுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், அடுத்த காலாண்டில் தொழிலாளர்களும் நிறுவனங்களும் பி.எஃப். தொகையை 10% செலுத்தினால் போதும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.ஊதியத்தில் 12 சதவீதம் என்பது பி.எஃப். தொகையாக இருக்கும்பட்சத்தில், அடுத்த காலாண்டில் 10 சதவீத பிஎஃப் தொகையை செலுத்தும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் கையில் சிறிதளவு பணம் மிச்சமிருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரயில்வே, சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் பணி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு...
ரயில்வே, சாலைப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த கால அளவு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.கரோனா நோய்த்தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் பிரதமர் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான 15 முக்கிய சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். அதில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக ஒரு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே, சாலைப் போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த கால அளவு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. கட்டுமானத் தொழில், சரக்கு மற்றும் சேவைகள் துறை உள்பட அரசு மற்றும் தனியார் கூட்டமைப்புடன் உள்ள அனைத்து ஒப்பந்தங்களும் இதில் அடங்கும். அதன்படி, ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதமும் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
BUDGET
NEWS
அடுத்த 3 மாதங்களுக்கும் பி.எஃப். தொகையை அரசே செலுத்தும் - 'சுயசார்பு இந்தியா' என்ற பெயரில் திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு முழு விவரங்கள்
அடுத்த 3 மாதங்களுக்கும் பி.எஃப். தொகையை அரசே செலுத்தும் - 'சுயசார்பு இந்தியா' என்ற பெயரில் திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு முழு விவரங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.