தமிழ் எழுத்துக்கள் & வாசிப்பு பயிற்சி விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 13, 2020

1 Comments

தமிழ் எழுத்துக்கள் & வாசிப்பு பயிற்சி விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ் எழுத்துக்கள் அட்டவணையின் பின்னணியில் தரப்பட்டுள்ள வண்ணங்கள் குறித்த விளக்கம்: 1. உயிர் எழுத்துக்கள் பின்னணியில் மஞ்சள் நிறம் தரப்பட்டுள்ளது.
2. மெய்யெழுத்துக்களின் பின்னணியில் பச்சை வண்ணம் தரப் பட்டுள்ளது.
3. தமிழில் எந்த வார்த்தைகளிலும் நாம் பயன் படுத்தாக எழுத்துக்களின் பின்னணியில் சிவப்பு வண்ணம் தரப் பட்டுள்ளது.
4. ஒரே உச்சரிப்பு ஒலி கொண்ட ந, ண, ன எழுத்து வரிசைகளின் (இடமிருந்து வலம்) பின்னணியில் வெளிர் பச்சை நிறம் தரப்பட்டுள்ளது.
5. ஒரே உச்சரிப்பு ஒலி கொண்ட ல, ழ, ள எழுத்து வரிசைகளின் பின்னணியில் சற்று அடர் பச்சை வண்ணம் தரப் பட்டுள்ளது.
6. மேற் கூறியவற்றைத் தவிர பிற உயிர்மெய் எழுத்துக்களின் வரிசை பின்னணியில் பிரவுன் வண்ணம் தரப் பட்டுள்ளது.
7. வடமொழி எழுத்துக்கள் வரிசையின் பின்னணியில் வெள்ளை வண்ணம் தரப் பட்டுள்ளது.
8. சில எழுத்துக்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரே உச்சரிப்பு ஒலி வருவது போல தோன்றும்.
எ. கா.
ந, ண, ன
ல, ழ, ள
ர, ற
ஆனால் இவற்றின் உச்சரிப்பில் நுண்ணிய மாற்றங்கள் உண்டு. இத்தகைய மாற்றங்களை, மாணவர் தமிழ் எழுத்துக்களை நன்கு இனம் கண்டு கொண்ட பிறகு, இந்த எழுத்துக்கள் நாவின் எப்பகுதியிலிருந்து பிறக்க வேண்டும் என தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
9. மேற் கூறிய வகையில் எழுத்துக்களின் பின்னணியில் வண்ணம் கொடுத்திருப்பது, முதல் வகுப்பு மாணவர்கள் மற்றும் மெல்லக் கற்போர் எழுத்துக்களை எளிதாக இனம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களின் கற்றலை எளிதாக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.
10. மேற்கண்ட தமிழ் எழுத்துக்களின் அட்டவணையை முதல் மற்றும் இரண்டாம் மாணவர்களுக்கு தினமும் காலை ஒரு முறை மற்றும் மாலை ஒரு முறை வாசிக்க பயிற்சி அளிக்கும் போது, தமிழ் எழுத்துக்கள் மாணவர்களின் மனதில் ஆழமாக பதியும். பயிற்சி அளிக்கும் போது, ஒவ்வொரு வரிசை எழுத்துக்களையும் மேலிருந்து கீழ், கீழிலிருந்து மேல், இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என்ற வகையில் பயிற்சி அளிக்க வேண்டும்.
இதை flex மூலம் பிரிண்ட் செய்து பள்ளிச் சுவற்றில் மாட்டி பயிற்சி அளிக்கலாம். flex அளவு 4 X 3 அடி. பிரிண்ட் செலவு ரூபாய் 150 க்குள் வரும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. Picture Download option இல்லை என்றால் எப்படி ?

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews