Breaking

Sunday, May 10, 2020

எந்த தேர்வும் ரத்து செய்யப்படாது , திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் -TNPSC உறுதி.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஓய்வு பெறுவோரின் வயதை அதிகரித்த காரணத்தால், தமிழக அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படாது. இதனால், தலைமைச் செயலகம், அரசுத் துறைகளின் பல்வேறு முக்கிய அலுவலகங்களில் ஓராண்டுக்கு காலியிடங்களே உருவாகாது. இதனால், அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா் தோ்வுகள் நடைபெற வாய்ப்பில்லை என்று இரண்டு நாட்களாக செய்திகள் வலம் வந்தன. இதுகுறித்து இன்று அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் குரூப்4 முதல் குரூப்1 வரை அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என அறிவித்துள்ளது
2020 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையின்படி எந்த தேர்வுகளும் ரத்து செய்யப்படாது. திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என TNPSC தரப்பு அறிவித்துள்ளது குரூப் 1 முதல் 4 வரை உள்ள அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை 59 ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஓராண்டு காலத்திற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து எந்த ஒரு தீர்வும் நடைபெறாது என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. நிறைய இடத்தில் டிஎன்பிசி தரப்பிடம் இருந்து ஒரு செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் எந்தவித அச்சமும் குழப்பமும் அடையாமல் தொடர்ந்து தாங்களை தேர்வுக்கு தயார் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்
எந்த தேர்வும் ரத்து செய்யப்படாது திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் - TNPSC உறுதி நடப்பு ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்து என்பது தவறான தகவல். ஏற்கனவே வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். அடுத்த ஆண்டில், அரசு சமர்ப்பிக்கும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பணியிடங்களின் எண்ணிக்கை,தேர்வு அட்டவணை உள்ளிட்டவை வெளியிடப்படும். நடப்பு ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேர்வர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தொடர்ந்து தேர்வுக்குத் தயாராகலாம் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்...
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog