நாளை முதல் ஆன்லைனில் தினமலர் வழிகாட்டி - பதிவு செய்யுங்கள் மாணவர்களே! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 05, 2020

Comments:0

நாளை முதல் ஆன்லைனில் தினமலர் வழிகாட்டி - பதிவு செய்யுங்கள் மாணவர்களே!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'தினமலர்' மற்றும் 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' இணைந்து வழங்கும் ஆன்லைன் 'வழிகாட்டி' நிகழ்ச்சி நாளை முதல், 17ம் தேதி வரை தினமும் காலை 10 முதல் 12 மணிவரை நடக்கிறது.உயர்கல்விக்கான அனைத்து தகவல்களையும் அள்ளித்தரும் இந்நிகழ்ச்சியில், சிவில் சர்வீசஸ், கலை, அறிவியல், வேளாண்மை, சட்டம், மருத்துவம், துணை மருத்துவம், கம்ப்யூட்டர் சயின்ஸ்.மீடியா, சி.ஏ., சி.எம்.ஏ., ஏ.சி.எஸ்., ஏ.சி.சி.ஏ., ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங், டீப் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, ஐ.ஓ.டி., உட்பட 30க்கும் மேற்பட்ட துறைகளில், நிபுணர்கள் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை வழங்க உள்ளனர்.
இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச் சந்திரன், தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத், கல்வி ஆலோசகர்கள் நெடுஞ்செழியன் மற்றும் ஜெயப்பிரகாஷ் காந்தி உட்பட பலர் பங்கேற்று மாணவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். மாணவர்களின் வசதிக்கு ஏற்ப ஸ்மார்ட்போன், டேப்லட், லேப்டாப் ஆகியவற்றின் வாயிலாக இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் வழியாக இந்நிகழ்ச்சியை எளிதாக பங்கேற்கலாம். இந்நிகழ்ச்சியில் இலவசமாக பங்குபெற www.kalvimalar.com இணையதளத்தில் உடனே பதிவு செய்யலாம்.
மேலும், பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைன் வாயிலாக நடைபெறும் சைக்கோமெட்ரிக் தேர்வு, நீட் மற்றும் ஜே.இ.இ., மாதிரி தேர்வு இலவசம். உயர்கல்வி குறித்த இ-கையேடும் மாணவர்களுக்கு வழங்கப்படும். கல்விமலர் இணையதளம், தினமலரின் யுடியூப், பேஸ்புக் பக்கங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே இந்நிகழ்ச்சியை பங்கேற்று பயன்பெறலாம்.இந்நிகழ்ச்சியில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் ஆகியவை பவர்டு பை ஸ்பான்சர்களாக பங்கேற்கின்றனர். வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜ்ஸ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றனர். நாளை முதல் ஆன்லைன் 'தினமலர் வழிகாட்டி -2020'
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews