👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திறமை இருந்தால், எந்த இக்கட்டான நேரத்திலும் சம்பாதிக்க முடியும் என்பதை, நிரூபிக்கும் வகையில், ஆசிரியர்கள் சிலர் 'ஆன்லைன்' டியூஷன் எடுத்து வருகின்றனர்.
கோவையில், ஆன்லைனில் டியூஷன் நடத்தி, இந்த கொடுமையான விடுமுறையை தங்களுக்கு பயன்படுத்தி, வருகின்றனர் சில ஆசிரியர்கள்.இதற்கு மிகப்பெரிய முதலீடு என்று ஒன்றும் தேவையில்லை. திறமை இருந்தால் போதும்; லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர், நல்ல இன்டர்நெட் வசதி ஆகியவையே மூலதனம்.ஆன்லைனில் டியூஷன் எடுக்க, சில இணையதளங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்துக்கும், திறமையான ஆசிரியர்களை மாணவர்களும் பெற்றோரும், வலைதளத்தில் வலை வீசி தேடுகின்றனர்.அது போன்று தேடும் பெற்றோரிடம், உங்கள் திறமை குறித்து எடுத்து காட்ட வேண்டும்.
உங்களை தேர்வு செய்தால், எப்போது வேண்டும் என்றாலும் பாடம் நடத்தலாம்.இது குறித்து, 'ஆன்லைன்' டியூஷன் ஆசிரியர்கள் கூறியதாவது:தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, நடைமுறைகளும் மாறி வருகின்றன. முந்தைய காலங்களில் ஒரு ஆசிரியரின் வீட்டுக்கு மாணவர்கள் டியூஷன் படிக்க வந்தனர்.
பின், ஹோம் டியூஷன் என்ற பெயரில், மாணவர்களின் வீட்டுக்கு ஆசிரியர்கள் சென்று பாடம் நடத்தினர்.இப்போது, இருவரும் அலையத் தேவையில்லை. ேஹாம் டியூஷன் வந்து விட்டது. ஆன்லைன் டியூஷன் முறை பிரபலமாகி வருகிறது.இதற்கு, முதலில் ஆன்லைன் டியூஷன் இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும். எந்த பாடத்தில் திறமை உள்ளதோ, அந்த பாடத்தை கற்பிக்கலாம்.நமக்கு தேவையான, மாணவனுக்கு உகந்த நேரத்தை ஒதுக்கி பாடம் நடத்தலாம். இதன் மூலம் நேர்மையான முறையில் வருமானம் கிடைக்கிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.திறமை இருப்பவர்களின் காட்டில், எப்போதும் பணமழைதான். கொரோனாவாவது ஒன்றாவது!
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.