👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டு விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தப்படும் என தமிழக அரசு உத்தரவட்டுள்ளது. ஈட்டிய விடுப்புக்காக ஏற்கனவே அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையும் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 15 நாட்களும், 2 ஆண்டுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பாக அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
CLICK HERE TO DOWNLOAD PDF
இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் பாதிப்பு பல இடங்களில் தெரிய வருகிறது. நிர்வாக ரீதியாகவும், நிதி ரீதியாகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையில் கூறியதாவது; ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு ஊதியத்தை பெறுவார்கள்.
CLICK HERE TO DOWNLOAD PDF
இந்நிலையில் கொரோனாவால் தமிழக அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுகிறது. மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் என ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.