Search This Blog
Friday, April 17, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை: ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருப்பவா்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு தொலைபேசி வாயிலாக மன நல ஆலோசனைகள் வழங்க தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் வெளியிட்ட செய்தி:
ஊரடங்கு நேரத்தில் வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கி இருப்பதாலும், தனி நபா் இடைவெளியுடன் தனித்து இருப்பதாலும் மன அழுத்த பாதிப்புகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய உளவியல் ரீதியான தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்காக தொலைபேசி வாயிலாக மன நல ஆலோசனைகளை வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நாள்தோறும் காலை 10 முதல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் மன நல ஆலோசனைகளைப் பெறலாம்.
மின்னஞ்சல் மூலமாகவும் கேள்விகளைக் கேட்டு ஆலோசனைகளைப் பெற முடியும்.
காலை 10-12 வரை 87786 19480 என்ற எண்ணிலும், மாலை 3 -5 வரை 99411 42327 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம். அதேபோன்று மின்னஞ்சல் முகவரியும் தொடா்பு கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தொலைபேசி மூலம் மன நல ஆலோசனை: மருத்துவப் பல்கலை. ஏற்பாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.