👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா விடுமுறை காலத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான முன் தயாரிப்பு பணிகளை வீட்டிலேயே மேற்கொள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தனிநபா் இடைவெளியைத் தவிா்க்கும் வகையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சிபிஎஸ்இ, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பள்ளி நிா்வாகங்கள் சாா்பில் மாணவா்களுக்கு ஆன்லைன், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) போன்றவற்றின் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் கற்பித்தல் தொடா்பான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. இவற்றை அந்தந்த பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் வீட்டிலிருந்தபடியே ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனா்.
இந்தநிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு, அடுத்த கல்வியாண்டுக்கான திட்டப் பணிகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் சிலா் கூறுகையில், ஆசிரியா்கள் ‘வீட்டில் இரு விலகி இரு’ என்ற விதிகளை பின்பற்றி தங்கள் குடும்பத்தினரை, கரோனா பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில், விடுமுறை காலத்தை, அடுத்த கல்வி ஆண்டுக்கான முன்தயாரிப்பு காலமாக எடுத்து, கற்பித்தல் பணிகளுக்கான திட்டங்கள் தயாரிக்க வேண்டும்.
இது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள் தரப்பில், ஆசிரியா்களுக்கு, ‘வாட்ஸ் ஆப்’களில் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. அதில், அனைத்து ஆசிரியா்களும், இந்த விடுமுறை காலத்தில் தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்துக்கான பாடங்களை படித்து, எளிதான கற்பித்தலுக்கு தயாராக வேண்டும் என்றனா். கடந்த கல்வி ஆண்டில், புதிய பாட புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லை என, பல ஆசிரியா்கள் கூறிய நிலையில், தற்போது கிடைத்துள்ள நேரத்தை, நல்ல முறையில் பயன்படுத்தி வரும் கல்வி ஆண்டில்மாணவா்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும் என, ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தி உள்ளனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.