Routerக்கு மிக அருகில் இருப்பவர்களுக்கு வைஃபை வேகமாக இருக்கும். சிலர், வீட்டு வாசலில் Router-ஐ வைத்துவிடுகின்றனர். அவர்கள் அறைக்குள் இருந்து வீடியோ கால் மூலம் பேசும்போது நெட்வொர்க் சரியாக இல்லாமல் பிரச்சனை ஏற்படலாம். இதனால், வீட்டிற்கு நடுவில் Router-ஐ வைப்பதே சிறந்தது என கூகுள் கூறுகின்றது.
புதிய Router-ஐ பயன்படுத்துங்கள்:
பழைய வெர்சன் Router-ஐ பயன்படுத்தினால், வேகம் குறைவாக இருக்கும் எனவும் புதிய வெர்சன் Router-ஐ பயன்படுத்தினால் மட்டுமே அதன் வேகம் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் குழு பரிந்துரைக்கிறது.
பல மக்கள் ஒரே சமயத்தில் வைஃபை பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவாக இருக்கும். அதனால், உங்களது பாஸ்வார்டை ரகசியமாக வைத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் மட்டுமே உங்களது வைஃபை-ஐ பயன்படுத்தமுடியும். அதனால் வைஃபையின் வேகம் நன்றாக இருக்கும் என்று கூகுள் தரப்பு கூறுகிறது.
விருந்தினர்களுக்கு தனி வைஃபை வைத்துக்கொள்ளுங்கள்:
உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்கள் பயன்படுத்துவதற்காக அவர்களுக்கான தனி வைஃபை வசதி செய்துகொடுப்பதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும்போது இடையூறு ஏற்படாமல் இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.