கரோனா வைரஸ் பாதிப்பை போக்க, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. உலக அளவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது.இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, இந்த மாத்திரை உட்பட உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. அந்தத் தடையை நீக்கி மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.அதை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவிட்டார்.மேலும், பிரேசில், இஸ்ரேலுக்கும் மாத்திரை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நாடுகள் உட்பட 30நாடுகள் இந்த மாத்திரையை வழங்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரேசில் அதிபர் போல்சனரோ உட்பட பல நாட்டுத் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.