BBA படிக்கலாமா? எதிர்காலம் எப்படி இருக்கும்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 10, 2020

Comments:0

BBA படிக்கலாமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
‘வணக்கம், நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளேன். அடுத்தாக பிபிஏ படிக்கலாம் என்று வீட்டில் சொல்கிறார்கள். எனக்கு பிபிஏ என்றால் என்னவென்றே தெரியாது. அந்த துறையில் சேர்ந்தால் நன்றாக படிக்க முடியுமா? அதில் என்ன பாடங்கள் வரும்? பிபிஏ படிப்பதால் எந்த துறைகளில் வேலை கிடைக்கும்? இவைகளை பற்றிய ஆலோசனை தேவைப்படுகிறது’. -செந்தில்குமார், திருநெல்வேலி
பிபிஏ என்றால் என்ன?
பிபிஏ என்பது இளநிலை வணிக நிர்வாகம் ஆகும். ஆங்கிலத்தில் Bachelors in Business Administration எனப்படும். இது மூன்றாண்டு பட்டப்படிப்பு. பன்னிரண்டாம் வகுப்பில் கலை, அறிவியல், வணிகவியல் என எந்த படிப்புகள் படித்தாலும், பிபிஏ.,வில் சேர முடியும். பிபிஏ பற்றி ஒரே வரியில் சுருக்கமாக சொல்வதென்றால் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகும். இதில் மேனேஜ்மென்ட் பற்றியும், தலைமைப் பண்புகளுக்கான திறன் படிப்புகளும், தொழில் முனைவோர் பற்றிய அடிப்படை புரிதலும் இருக்கும்.
நுழைவுத்தேர்வுகள் ஏதும் உள்ளதா? மற்ற படிப்புகளைப் போலவே பிபிஏ படிப்புக்கும் பிரத்யேக கல்லூரிகளும், நுழைவுத்தேர்வுகளும் உண்டு. ஆனால், பல மாணவர்களுக்கு இது தெரிவதில்லை. பிபிஏ படிப்புக்கு UGAT, IPMAT, FEAT, BHU UET, NPAT, AUMAT போன்ற நுழைவுத்தேர்வுகள் உண்டு. மேனேஜ்மென்ட் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வுகளை எழுதுவதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும்.
ஸ்பெஷல் படிப்புகள்:
சாதாரணமாக பிபிஏ பட்டப்படிப்புகள் மட்டும் இல்லாமல், ஸ்பெஷலைஸ்டு கோர்ஸ்களும் உள்ளது. அதாவது, துறை சார்ந்த பிபிஏ படிப்புகளும் உள்ளது. அவை,
BBA Marketing
BBA in Banking and Insurance
BBA Foreign Trade
BBA Human Resource
BBA Finance
BBA Hospital and Healthcare Management
BBA Information Technology
BBA Hospital and Healthcare Management
BBA Communication and Media Management
பிபிஏ பாடத்திட்டம்:
ஏற்கனவே கூறியபடி பிபிஏ என்பது மூன்றாண்டு பட்டப்படிப்பு. பல்கலைக்கழக, கல்லூரிகளுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் மாறுபடும். இருப்பினும் சில பொதுவான பாடத்திட்டங்களை இங்கு பார்ப்போம்:
Principles Of Management
Managerial Economics
Concepts Of Information Technology
Business Psychology & Science
Marketing Management
Production And Materials Mgt
Money,Banking Inter. Trade Institutions
Financial And Cost Accounting
Business Mathematics & Statics
Financial & Management Accounting
Production & Material Management
Introduction To Operations Research
Business Economics
வேலைவாய்ப்புகள்:
பிபிஏ படித்தவர்களுக்கு எல்லா நிறுவனங்களிலும் வரவேற்பு உண்டு. ஆனால், எந்த கல்லூரியில், எப்படி படித்திருக்கிறோம், எந்த திறன்களை வளர்த்துள்ளோம் போன்றவை மிகமிக முக்கியமானவை. HR மேனேஜ்மென்ட், ஃபைனான்ஸ், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங், தகவல் தொழில்நுட்பம் என பல்துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளது. பிபிஏ முடித்தவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 3 லட்சம் வரையில் சம்பளம் பெற முடியும். நல்ல நிறுவனங்களில் சேரும் பட்சத்தில், அதற்கு மேலும் சம்பாதிக்க முடியும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews