1. அமெரிக்கா இனி உலகின் முன்னணி ஏகாதிபத்திய ஆதிக்க நாடு அல்ல.
2. 3 வது உலகப் போரை யாராலும் கையாள முடியவில்லை.
4. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கான பயணங்கள் இல்லாமல் நாம் விடுமுறையில் வாழ முடியும்.
5. பணக்காரர்கள் உண்மையில் ஏழைகளை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளனர்.
6. விலைகள் உயரும்போது மனிதர்கள் தங்கள் சமூக பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் சந்தர்ப்பவாத மற்றும் வெறுக்கத்தக்கவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
7. மனிதர்கள் தான் கிரகத்தின் உண்மையான வைரஸ்கள்.
8. கமயூனிசம் இல்லாமல் ஏழைகளுக்கு பில்லியன் கணக்கான ரூபாயை நாம் செலவிட முடியும்.
9. சுகாதார வல்லுநர்கள் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரை விட மதிப்புடையவர்கள்.
11. மிருகக்காட்சிசாலையில் விலங்குகள் எப்படி உணர்கின்றன என்பதை உணர்கிறோம்.
12. மனிதர்கள் இல்லாமல் இப்பூலகம் விரைவாக மீளுருவாக்கம் செய்கிறது.
13. பெரும்பான்மையான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்.
14. நாமும் குழந்தைகளும் அதிவிரைவு குப்பை உணவு இல்லாமல் வாழலாம்.
15. சிறு குற்றங்களுக்காக சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க முடியும்.
16. சுகாதாரமான வாழ்க்கை வாழ்வது கடினம் அல்ல.
18. உலகில் நிறைய நல்ல மனிதர்கள் உள்ளனர்.
19.தரமான கல்விக்கொள்கையுடன் அதிகமான பள்ளிகளைக் கட்டினால், குறைந்த மருத்துவமனைகளை தேவைப்படும் ...
இவையனைத்தும் ...நாம் ஒரு புதிய சகாப்தத்திற்கு செல்கிறோம் என்பதையே உணர்த்துகிறது...
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள் கடந்த சில நாட்களாக வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள். இந்த சில நாட்களிலேயே உலகம் பெரிய அளவில் மாறத் துவங்கி விட்டது.
காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது. மிருகங்கள், பறவைகள் நிம்மதியாக உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் மனிதனுக்கு அத்தியாவசிய தேவை எது? என்ற சிந்தனையே இப்போது தான் வந்துள்ளது. இதெல்லாம் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கான அறிகுறிகள் தான். 20 ஆண்டுகளில் மாறிய உலகம்
90களில் தான் இந்த உலகம் நவீனமயமாக மாறத் துவங்கியது. உலகமயமாக்கல் கொள்கை பல நாடுகளை மாற்றத் துவங்கியது. ஆனால், 2000மாவது ஆண்டுக்குப் பின் தான் உலகம் தலைகீழ் ஆனது. எங்கும், எதிலும் பரபரப்பு. ஐந்து நாட்கள் இருந்த வேலை நாள் ஆறு நாள் ஆனது. தொழிற்சாலைகளில் மட்டுமே இருந்த பல நவீன இயந்திரங்கள், மனிதனின் வீட்டுக்குள், படுக்கை அறைக்குள், போர்வைக்குள், கழிவறைக்குள் கூட குடி வந்தது. குறிப்பாக, செல்போன்.
ஆனால், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, எங்கே நம் மீதும் தொற்றிக் கொள்ளுமோ என அச்சத்தில் இருக்கும் பலர் வீட்டிலேயே முடங்கி, வேலை என்ன ஆகுமோ, எதிர்காலம் காலம் என்ன ஆகுமோ என கவலையில் இருக்க, ஒட்டுமொத்த பூமியிலும் காற்று மாசு சட்டென குறைந்துள்ளது.
காற்று மாசை குறைத்த வைரஸ்
பல ஆண்டுளாக, பெரிய நாடுகள் கூட்டம் போட்டு காற்று மாசை குறைப்பது பற்றி பேசி வந்தார்கள். எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பின் டெல்லியில் மூச்சு முட்டி பல வியாதிகளை உண்டாக்கும் அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டது. அப்போது யாராலும், அந்த காற்று மாசை நிறுத்த முடியவில்லை. ஆனால், தம்மாத்தூண்டு கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமி, காற்று மாசை சில நாட்களில் ஒரேடியாக குறைத்துள்ளது. குப்பை மேலாண்மை
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இழுத்து மூடப்பட்ட தொழிற்சாலைகளால் பெருமளவு கழிவுகள் வெளியேற்றம் குறைந்துள்ளது. வீடுகளில் இருக்கும் மக்களும் எதிர்காலம் நிச்சயமற்ற சூழலில், எந்த உணவுப் பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் குப்பை என ஒதுக்கப்படும் உணவுக் கழிவுகளை எப்படி பயன்படுத்தலாம் என இப்போதே பலர் யோசனைகள் கூறி வருகின்றனர்.
பரபரப்பு என்ற சொல் கடந்த 20 ஆண்டுகளில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நகரங்களில் ஓடிக் கொண்டே இருந்த மக்கள், இன்று வீட்டுக்குள் முடங்கி, தங்கள் சக குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை முதன் முறையாக புரிந்து கொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். பலர் இந்த ஊரடங்கில் தான் உண்மையான, அமைதியான, பொருளாதார அளவில் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
குழந்தைகள் மீது கவனம்
பரபரப்பான வாழ்க்கை முறையில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். ஆனால், கொரோனா வைரஸ் அச்சம் பெற்றோர்களை வீட்டுக்குள் மட்டும் முடக்கவில்லை. அவர்கள் கவனத்தை தங்கள் குழந்தைகளை நோக்கி திருப்பி உள்ளது.
இயற்கை மீதான அக்கறை
காடுகளுக்குள் இருக்கும் மிருகங்கள், பறவைகள் தங்களுக்கு தேவையான உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும். அவற்றின் வாழ்க்கை முறையும் இயற்கையின் கட்டுக்குள் தான் இருக்கும். தானும் வாழ்ந்து, மற்ற இனங்களும் வாழ வேண்டும் என்ற இயல்பான அக்கறை இருக்கும்.
ஆனால், மனிதனின் வாழ்க்கை முறை கடந்த சில ஆண்டுகளில் எல்லையே இல்லாமல் தேவயற்ற உணவு முறைகள், வாழ்க்கை முறைகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பார்ட்டி கலாச்சாரம் அதன் உச்சம். அவற்றிற்கு எல்லாம் முடிவு கட்டி உள்ளது கொரோனா வைரஸ். கடந்த சில நாட்களில் புதிய தலைமுறை மனிதர்களுக்கு தேவையானதை பற்றி மட்டுமே சிந்திக்க கற்றுக் கொடுத்துள்ளது இந்த கிருமி.
அரசின் கடமை
ஒரு அரசின் அடிப்படை கடமை, தன் நாட்டு மக்களுக்கு உணவு, சுகாதாரம், இருக்க இடம் ஆகியவற்றை உறுதி செய்வதே. கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டு மக்களை கண்டு கொள்ளவே இல்லை. கார்பரேட் கம்பெனிகளுக்கு தேவையானதை செய்து கொடுத்த அரசுகள், மக்கள் தங்களுக்கு தேவையானதை தாங்களே பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறின.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.