கொரோனாவுக்கு அரசு பள்ளி தலைமையாசிரியர் பலி - உடல் நல் அடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 05, 2020

Comments:0

கொரோனாவுக்கு அரசு பள்ளி தலைமையாசிரியர் பலி - உடல் நல் அடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டில்லியில் நடந்த, தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய, அரசு பள்ளி தலைமை ஆசிரியர், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில், நேற்று இறந்தார். டில்லியில் நடைபெற்ற, தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற, விழுப்புரம், சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த, 51 வயது நபர் அடையாளம் காணப்பட்டார். அவருக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ரத்த மாதிரியை சோதனைக்கு அனுப்பியதில், கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதியானது. இதனால், தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது. நேற்று முன்தினம் இரவு, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், நேற்று காலை, 7:40 மணிக்கு இறந்தார். டாக்டர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களுடன், பிரேத பரிசோதனை செய்தனர். போலீசார் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, விராட்டிக்குப்பத்தில் உள்ள, கபகஸ்தானுக்கு என, அழைக்கப்படும் சுடுகாடுக்கு, சடலத்தை கொண்டு சென்றனர். பின், உறவினர்கள் முன்னிலையில், இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த நபர், அரசு பள்ளி தலைமை ஆசிரியர். தமிழகத்தில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த, இரண்டாவது நபர்.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 51 வயதுடைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். விழுப்புரம் மருத்துவமனையில் கொரானா வைரஸ் வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மதுரையைச் சேர்ந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் சிங்காரத்தோப்பு சேர்ந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் (51), தில்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 67 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட்-19 பாசிட்டிவ் 51 வயது ஆண், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று இரவு (03.04.2020) மூச்சுத் திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் விராடிக்குப்பன் சாலையில் உள்ள இடுகாட்டில் வழக்கத்தை விட அதிக ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு புதைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் கரோனாவுக்கு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
CLICK HERE TO DOWNLOAD NEWS PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews