ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 20, 2020

2 Comments

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பிகே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப் படியினை உயர்த்தி வழங்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
அகவிலைப்படி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்- இறக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்-அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் குடும்பங்கள் என மொத்தம் ஒன்றரைக் கோடிப் பேர் பயன்பெறுவார்கள். அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி குடிமகனுக்கும் எடுத்துச் செல்லும் பணியினை ஆசிரியர்- அரசு ஊழியர்கள் சிறப்பான முறையில் செய்துவருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள 4% அகவிலைப் படியினை மாநில ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்கிட ஆவன செய்யும்படி தமிழக முதல்வரை, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. இன்றைய உலகில் கொரோனோ விற்கு எதிராக போராடும் வேலையில் இந்த வேண்டு கோள் தேவையான ஒன்றா? என்பதனை இந்த சங்கத்தில் உள்ளவர்கள் யோசனை செய்ய மாட்டீர்களா?பணமே பிரதானமா? உயிர் இருந்தால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும். எனவே இது போன்று விடுமுறை கேட்பது, பணப்பலன் கேட்பது போன்றவற்றை சூழ்நிலைக்கு ஏற்றார் போல் செயல்படும். உங்களை போன்று சில சங்கங்கள் இவ்வாறு செயல்படுவதால் ஆசிரியர்களுக்கு சமூகத்தில் மதிப்பு இல்லை. சிந்தித்து செயல்படுங்கள் சங்க நிர்வாகிகளே....

    ReplyDelete
  2. teacher requirement ???????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews