விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 25, 2020

Comments:0

விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 7ம் தேதிக்கு கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது.கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிந்தது. பிளஸ் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 விடைத்தாள்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.தமிழக அளவில் 112 விடைத்தாள் திருத்தும் மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. மார்ச் 31 முதல் திருத்தும் பணி துவங்க இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 7 முதல் துவங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பார்வை - 1ல் கண்டுள்ள அரசாணைக்கிணங்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் ஏற்கனவே 31.03.2020 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் தொடர்பான விடைத்தாட்கள் மைய மதிப்பீட்டுப் பணிகளும் , மண்டல முகாம் சார்ந்த பணிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன . இம்மதிப்பீட்டு பணிகள் 07.04.2020 அன்று தொடங்கப்படும் .
இது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் . விடைத்தாள் சேகரிப்பு மையம் மற்றும் மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதையும் , விடைத்தாட்கள் பாதுகாப்பினையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews