21 Days National Lock Down - எவையெல்லாம் இயங்கும்? இயங்காது...? - Central Govt Official Letter - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 25, 2020

Comments:0

21 Days National Lock Down - எவையெல்லாம் இயங்கும்? இயங்காது...? - Central Govt Official Letter - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று (24 ம் தேதி ) இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரயைாற்றினார். வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டு மக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி கொரோனா செயல்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகள் கூட கடுமையாக போராடி வருகிறது. CLICK HERE TO DOWNLOAD PDF
Lock Down ன் படி போலீஸ் நாட்டின் குடிமகன்களை கைது செய்ய முடியாது... எச்சரித்து அனுப்ப முடியும். ஆனால் Curfew ல் 144ன் படி கைது செய்ய முடியும். Lock Down என்பது தொற்று நோய் சட்டம் 1897ன் படி இயங்கும்.. Curfew ல் அனைத்து அத்தியாவசிய பணிகளும் கூட முடக்க முடியும்.Lockdown ன் படி அத்தியாவசிய பணிகள் இயங்கும்... Lock Down ன் போது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இயங்க சிறப்பு Pass தேவை இல்லை. ஆனால் Curfew க்கு சிறப்பு அனுமதி வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD PDF
சங்கிலி தொடர் முறையில் பரவும் இந்த தொற்றை ஒழிக்க நாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் அனைவரும் விலகியே இருக்க வேண்டும். இதற்கு நான் கூட விலக்கு அல்ல. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்க கூடாது. யாரும் கொரோனாவை ஒரு விளையாட்டாக நினைக்காதீர்கள். வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து கிராமங்களும் முடக்கப்பட வேண்டும். இதன்மூலம் மட்டுமே நாம் கொரோனாவை வெல்ல முடியும். இவ்வாறு மோடி பேசினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews