👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''தமிழகத்தில், சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - டி.ஆர்.பி.ராஜா: மன்னார்குடி தொகுதிக்கு உட்பட்ட, வடபாதியில் உள்ள, நடுநிலைப் பள்ளியை, விதிகளை தளர்த்தி உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும். இல்லையெனில், கூடுதலாக, இரண்டு வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும். அதேபோல, சில பள்ளிகளில் உள்ள, பழுதடைந்த கட்டடங்களை அகற்ற வேண்டும்.
'கஜா' புயலில், சேதமடைந்த பள்ளிகளுக்கு கட்டடம் கட்டித் தர வேண்டும்.பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் மிகவும் அவசியம். 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட, 1,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில், வகுப்பறைகள் கட்டி தரப்படும். எல்லா பள்ளிகளுக்கும், சுற்றுச்சுவர் கட்டி கொடுக்கப்பட்டு, தமிழகத்தில் சுற்றுச்சுவர் இல்லாத பள்ளியே இல்லை என்ற, நிலை ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டு, 7,200 பள்ளிகளுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்க, நிதி வழங்குவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்போது, நீங்கள் கூறும் பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

7500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.