மின்வாரியத்தில் கள உதவியாளா் பணி: விண்ணப்பிக்க ஏப்.23 கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 21, 2020

Comments:0

மின்வாரியத்தில் கள உதவியாளா் பணி: விண்ணப்பிக்க ஏப்.23 கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
களப் பணிகளை மேற்கொள்ளும், 2,900 கள உதவியாளர் பணிக்கு, ஆட்களை நியமிப்பதற்கான தேர்வு அறிவிப்பை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில், பொறியாளர், கணக்கீட்டாளர், உதவியாளர் என, பல பதவிகளில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருவரே, பல வேலைகளை செய்ய வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கள உதவியாளர் என்ற பதவியில், 2,900 ஊழியர்களை நியமிப்பதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மின் வாரியம், நேற்று வெளியிட்டுஉள்ளது. ஐ.டி.ஐ., முடித்தவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு, வாரிய இணையதளத்தில் விண்ணப்பிப்பது, வரும், 24ம் தேதி துவங்கி, ஏப்ரல், 23ல் முடிகிறது.உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வுகள் வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இரு தேர்வுகள் நடக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, மின் வாரியம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிக்கை அறிவிக்கை எண் 05 / 2020 நாள் : 19 . 03 . 2020 . 1 . கள உதவியாளர் ( பயிற்சி ) பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்து 24 . 03 . 2020 முதல் 23 . 04 . 2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும் , முன்னாள் இராணுவ வீரர்கள் , ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களும் , கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம் :
மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் பணிக்கு, ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: கள உதவியாளா் பயிற்சி (ஊண்ங்ப்க் அள்ள்ண்ள்ற்ஹய்ற் பழ்ஹண்ய்ங்ங்) பணிக்கு 2, 900 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள், ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படிப்பில் எலெக்ட்ரீசியின், வயா்மேன், எலெக்ட்ரிக்கல் ஆகிய ஏதேனும் ஒன்றைத் தோ்வு செய்திருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்குத் தோ்வுக் கட்டணம் ரூ.500. இதர பிரிவினருக்கு ரூ.1000. இந்தப் பணிக்கு மாதம் ரூ.18, 800 முதல் ரூ.59,000 வரையில் ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
18 முதல் 30 வயதுக்குள் பட்டோா் விண்ணப்பிக்கலாம். இதரத் தகுதிகள், பாடத்திட்டம், தோ்வு முறை, இடஒதுக்கீடு, வயது வரம்பு தளா்ச்சி, தோ்வுமையங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ஞ்ங்க்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியாகும். இந்த இணையளத்தில் மாா்ச் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பம் பெறலாம். அதனை பூா்த்தி செய்து ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வங்கியில், ஏப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews