Search This Blog
Sunday, March 01, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம்மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம்மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம்மாணவர்களும் எழுதவுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதுவதற்கான நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதன்படி 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார். 15 நிமிடம் வினாத்தாளை படிக்கவும் 3 மணி நேரம் தேர்வு எழுதவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தேர்வுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் தேர்வுத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு நடைபெறும் வளாகம் மற்றும் தேர்வு அறையினுள் எடுத்து செல்லக் கூடாது எனவும், விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்களைபயன்படுத்தக் கூடாது என தேர்வுத்துறை நினைவூட்டியுள்ளது.
குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாள் என தனித்து காட்டும் விதமாக இருக்க கூடாது என்பதால் இந்த நடைமுறை கொண்டுவரப் பட்டுள்ளதாக தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.
10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்ரல்.13ல் நிறைவு, இந்த தேர்வு முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.
பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26ல் நிறைவு, இந்த தேர்வு முடிவுகள் மே.14ஆம் தேதி வெளியாகிறது.
பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு, இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல். 24ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பு.
பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 8.35 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர்.
பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்கி மார்ச் 24-ம் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளி யிடப்படுகிறது. முதல் நாளில் மொழிப்பாடத் தேர்வுகள் நடை பெற உள்ளன. நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 பேர் எழுத உள்ளனர்.
இதில் 4,41,612 மாணவிகள், 3,74,747 மாணவர்கள், 2 திருநங்கை கள், 62 சிறை கைதிகளும் அடங்குவர். இதற்காக 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. புதிய பாடத்திட்டத்தில் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள்.
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்துப் பார்க்க லாம். அடுத்த 5 நிமிடம் மாணவர் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் சுயவிவரங்கள் சரிபார்க்கப்படும். அதன்பின் மாணவர்கள் காலை 10.15 முதல் மதியம் 1.15 வரை 3 மணி நேரம் தேர்வு எழுதலாம். சிறப்பு சலுகையாக மாற்றுத் திறன் தேர்வர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒருமணி நேரம் வழங்கப்படும்.
பறக்கும் படைகள்:
தேர்வுக்கான எல்லா ஏற்பாடு களும் தேர்வுத்துறை சார்பில் செய் யப்பட்டுள்ளன. அறை கண்காணிப் பாளர் பணியில் 42 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். மேலும், வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதுதவிர முறை கேடுகளை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன.
அதேபோல், தேர்வில் முறை கேடுகளைத் தடுக்க மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. செல்போன் உட்பட மின்சாதனங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு குறித்த சந்தே கங்கள், புகார்களை தெரிவிக்க தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். கட்டுப்பாட்டு அறைகளை 9385494105, 9385494115, 9385494120 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
11th-12th
EXAMS
10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்.!
10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்.!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.