2021 சிவில் தேர்வு: மனிதநேய அறக்கட்டளை இலவசப் பயிற்சி ஆரம்பம்: விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 08, 2020

Comments:0

2021 சிவில் தேர்வு: மனிதநேய அறக்கட்டளை இலவசப் பயிற்சி ஆரம்பம்: விண்ணப்பிக்கலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2020- 2021 சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேயம் ஐஏஎஸ் இலவசக் கல்வியகம் நடத்தும் இலவச பயிற்சிக்கு மார்ச் 8 (ஞாயிற்றுக்கிழமை) முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனிதநேய மையம் இலவச கல்வி நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:
“சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தாரால் சமுதாய மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு கடந்த 2005-ம் ஆண்டு மனிதநேய அறக்கட்டளை தொடங்கப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது . சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் இலவச கல்வி இயக்கத்தில் பயிற்சி பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் அரசுப்பணி பெற்றுள்ளனர்.
மனிதநேயம் ஐஏஎஸ் இலவச கல்வி இயக்கம் மூலம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ மாணவியர்களும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு கடந்த 14 ஆண்டுகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், இந்திய வனத்துறை பணி ஆகிய பதவிகளுக்கும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் சிவில் மற்றும் மாவட்ட நீதிபதி குரூப் 1 குரூப் 2 குரூப் 2 ஏ (DC,DSP,DRO,DEO, CTO) சப் இன்ஸ்பெக்டர் ரெக்ரூட்மெண்ட், பஞ்சாயத்துராஜ், பொதுப்பணித்துறை ( சிவில், எலக்ட்ரிக்கல்) போன்ற பதவிகளுக்கும் தற்போது இந்திய வன அலுவலர் பதவிக்கு தேர்வாகியுள்ள பத்து பேரையும் சேர்த்து இதுவரை 3 ஆயிரத்து 505 மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேயம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையம் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பயிற்றுநர்கள் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கி வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மனிதநேயம் நடத்தவிருக்கிறது.
பயிற்சி பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் www.mntfreeias.com என்ற இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை( march-8) முதல் பதிவு செய்து கொள்ளலாம். தகுதியும், ஆர்வமும் உள்ள (கிராமப்புற, விவசாய, விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை) மாணவர்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுழைவுத் தேர்வை மனிதநேய மையம் நடத்துகிறது. நுழைவுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதி, உணவு மற்றும் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி அளிக்கவும் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யவும் இந்த நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வுக்கான பாடதிட்டத்தை மனிதநேய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். நுழைவுத்தேர்வுக்கான தேதி மற்றும் விவரங்கள் மாணவர்களுக்கு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும். 2021 தேர்வுக்காக நடைபெறும் தேர்வுக்கான தேர்வில் கலந்து கொள்வதற்காக எமது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்திட வேண்டும்”. இவ்வாறு மனிதநேய மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews