Search This Blog
Saturday, March 07, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உத்தரப்பிரதேசமின்சார வாரிய பணியாளர் களின் வருங்கால வைப்பு நிதியை , முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் ( டிஹெச்எஃப் எல் ) முறைகேடாக முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியது .
மத்திய அரசின் விதிகளின்படி , அரசுப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி ( இபிஎஃப் ) பணத்தை தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் . நிதி நிறு வனங்களில் முதலீடு செய்யக் கூடாது . அதன்படி , உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ( பிசிஎல் ) நிறுவன பணியாளர்களின் இபிஎஃப் பணம் கடந்த 2016 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை தேசியமயமாக் சுப்பட்ட வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந் தது .
அதன் பின் 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது . இந்நிலையில் , பிசிஎல் நிறுவனத்தின் நிதி பிரிவு முன்னாள் இயக்குநர் சுதான்ஷு துவிவேதியின் அறிவுறுத்தலின்பேரில் , கடந்த 2017 - ஆம் ஆண்டு மார்ச்மாதம் முதல் 2018 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அந்த நிறுவன பணியாளர்களின் இபிஎஃப் பணத்தை டிஹெச்எஃப்எல் நிறு வனத்தில் மின்சார வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஏ . பி . மிஸ்ரா முதலீடு செய்துள்ளார் .
இதுதொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது . தேசியம் யமாக்கப்பட்ட வங்கிகளில் இபிஎஃப் பணத்தை முதலீடு செய் யாமல் , பாதுகாப்பற்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக பிசிஎல் நிறுவனத்தின் முன்னாள் செயலர் பிரவீண் குமார் குப்தா , ஏ . பி . மிஸ்ரா , சுதான்ஷு துவிவேதி ஆகியோர் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது . |
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
வருங்கால வைப்பு நிதி முறைகேடு : விசாரணையை தொடங்கியது சிபிஐ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.