இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர், இன்ஜினியர் பதவிகளில் சேருவது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 06, 2020

Comments:0

இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர், இன்ஜினியர் பதவிகளில் சேருவது எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இஸ்ரோ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர், இன்ஜினியர் உள்ளிட்ட பதவிகளில் சேர விருப்பமா? இப்போது நீங்கள் பள்ளி, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தால், அடுத்தக்கட்டமாக என்ன படித்தால் இஸ்ரோவில் சேர முடியும்? வாங்க தெரிந்து கொள்வோம் பெரும்பாலான மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக வரவேண்டும், டாக்டராக வேண்டும், சைன்டிஸ்டாக வேண்டும் என்ற கனவுகளோடு இருப்பர். ஆனால், அதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கும். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் எண்ணற்ற பாடப்பிரிவுகள் உண்டு. அதில் எந்த துறையை தேர்ந்தெடுத்தால், கனவை நனவாக்கலாம் என்பது தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில், இஸ்ரோவில் சைன்டிஸ்ட் ஆக சேருவதற்கு எந்த துறையில் சேரலாம், எப்படி படிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
Indian Space Research Organisation எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சுருக்கமே இஸ்ரோ (ISRO) ஆகும். இந்நிறுவனம் 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. டாக்டர். விக்ரம் சாராபாய் என்பவர் இஸ்ரோவின் தந்தையாக அறியப்படுகிறார். விண்வெளி துறையில் அமெரிக், ரஷ்ய நாடுகள் பெரும் செலவு செய்து ஆய்வுகள் மேற்கொண்டிருந்த காலக்கட்டத்தில், உலக நாடுகளுக்குப் போட்டியாக இந்தியாவின் இஸ்ரோ உருவெடுத்தது. தற்போது மங்கள்யான், சந்திரயான் 1, சந்திரயான் 2, ககன்யான் என அடுத்தடுத்து விண்கலன்கள் மூலம் வான்வெளித்துறையில் வானளவுக்கு உயர்ந்துவிட்டது.
படிப்பு கல்வியைப் பொறுத்தவரையில் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு, மிககடினமான உழைப்புடன் படிக்க வேண்டும். 11 ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், அதில் நன்றாக படிக்க வேண்டும். பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். தொடர்ந்து 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகும் சைன்டிஸ்ட் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், இஸ்ரோவின் IIST கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன் விரிவாக்கம் Indian Institute of Space Science and Technology ஆகும். .இது இஸ்ரோவின் சொந்த கல்வி நிறுவனம் ஆகும். உலகிலயே டாப் 10 வான் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில் IIST உள்ளது.
என்ன துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்? IIST தவிர IIT, NIT போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களிலும் படிக்கலாம். இதில் சேருவதற்கு பிரத்யேகமாக JEE நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, JEE தேர்வுக்கு தயாராகி, அதிக மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் IIT, NIT கல்வி நிறுவனங்களில் சேர முடியும். இந்த கல்வி நிறுவனங்களில் B.Tech in Physics, Aero Space Engineering, M.Sc Astro physics, Astronomy என பல்வேறு வான்ஆராய்ச்சி தொடர்பான துறையில் சேர வேண்டும். இவ்வாறு படித்தப்பிறகும் உடனடியாக இஸ்ரோவில் சேர முடியும்.
முதுநிலைப் படிப்புகள்: இஸ்ரோவில் சேர்ந்து பணிபுரிவதற்கு முதுநிலைப் படிப்புகளையும் தொடரந்து படித்தால் சிறந்ததாக இருக்கும். வெறும் இளநிலை படிப்போடு நின்று விடாமல், எம்.டெக், M.Sc Astro Physics எம்எஸ்சி ஏரோ ஸ்பேஸ், போன்ற படிப்புகளை படிக்க வேண்டும். இஸ்ரோவின் சார்பில் ICRB என்ற தேர்வாணையம் செயல்படுகிறது. இதன் விரிவாக்கம் ISRO Central Recruitment Board ஆகும். இஸ்ரோவில் சைன்டிஸ்ட் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு இந்த தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் நடைபெறுகிறது. ICRB தேர்வில் 65 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால், தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் உதவி ஆராய்ச்சியாளர், ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் சேர முடியும். அடுத்தக்கட்டமாக ஆராய்ச்சித் தொடர்பான பணிகளில் மேற்கொண்டு கவனம் செலுத்த முடியும்.
இஸ்ரோவுக்கு நேரில் சென்று பார்க்க முடியுமா? சாதாரணமாக இஸ்ரோவுக்கு சென்று பார்வையிட முடியுமா என்றால் முடியாது என்பது தான் உண்மை. எனவே, சம்பந்தப்பட்ட துறையில் படிக்கும்பட்சத்தில், உரிய அனுமதி பெற்ற இஸ்ரோவில் செல்ல முடியும். தற்போது மாணவர்களுக்கு என சிறப்பு வகுப்புகள் இஸ்ரோவில் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்தும் இஸ்ரோவுக்குச் செல்ல முடியும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews