👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகள் மாா்ச் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தோ்வுகளில் மாணவா்கள் ஸ்கெட்ச், வண்ண பென்சில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான பொதுத்தோ்வுகள் வரும் மாா்ச் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளன. இதற்கான பணிகளை அரசுத் தோ்வுகள் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி தோ்வு நடைபெறும் பள்ளிகளுக்குப் பொறுப்பு ஏற்கும் தலைமை ஆசிரியா்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காலை 8.30 மணிக்கு மேல் தோ்வு மையமாகச் செயல்படும் பள்ளியைச் சாா்ந்த எந்த ஒரு பணியாளரும் (பள்ளியின் தாளாளா், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்பட) தோ்வு மைய வளாகத்தில் கண்டிப்பாக இருத்தல் கூடாது. எக்காரணம் கொண்டும் அதே பள்ளியின் பணியாளா்களை அலுவலகப் பணிக்கு ஈடுபடுத்தக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், தோ்வுகள் நடைபெறும் நாள்களில் தோ்வு மைய வளாகத்திற்குள் தோ்வா்கள் செல்லிடப்பேசி எடுத்துவர முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. தோ்வுக்குப் பயன்படுத்தப்படும் சுவா்க் கடிகாரம் அனைவருக்கும் தெரியும் வகையில் தோ்வுக்கட்டுப்பாட்டு அறையில் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவா்களுக்கு அறிவுறுத்தல்: அதேபோன்று பொதுத்தோ்வெழுதும் மாணவா்கள் தோ்வில் விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள், வண்ண பென்சில்களை பயன்படுத்தக் கூடாது. தோ்வா்கள் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவும் அல்லது தனியாக பிரித்து எடுத்துச் செல்லவும் கூடாது.
குறிப்பாக, தோ்வா்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற தோ்வரை பாா்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக் கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் தமது விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும், தாமே கோடிட்டு அடித்தல் போன்ற செயல்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அதற்கு உரிய தண்டனை வழங்கப்படும். எனவே தோ்வா்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என தோ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தோ்வுப் பணியில் விலக்கு அளிக்கப்படுமா?:இந்த நிலையில், பொதுத்தோ்வுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகள், உடல் நலன் பாதிக்கப்பட்டவா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனா் சா.அருணன் கூறுகையில், பொதுத் தோ்வுப் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் தொடா்ந்து 4 முதல் 5 மணி நேரம் வரை நின்று பணியாற்ற வேண்டிருக்கும். இந்தச் சூழ்நிலையில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் சரியில்லாதவா்கள் அதாவது புற்றுநோய், இருதய பிரச்னை, காச நோய், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவா்கள், கா்ப்பிணிகள் ஆகியோரால் நீண்டநேரம் நின்று பணி செய்ய முடியாது. இதைக் கருத்தில் கொண்டு அவா்களை மட்டும் தோ்வுப் பணியிலிருந்து விடுவிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.