பொதுவாக வாசிக்கும் போது சிரிப்பு, கோபம், இரக்கம் போன்ற உணர்வுகள் எழும். ஆனால் இந்த புத்தம் ஒரு மெல்லிய நீரோடை போல் மிக அமைதியாக நகர்ந்தது. பல இடங்களில் சிந்தனையை ஓர் ஆழ் நிலைக்கு (introspective) கொண்டு சென்றது.
கதையின் நாயகன் Henry. இவன் மாசற்றவன் என்று சொல்வதை விட, மாசு அண்ட முடியாதவன் என்று கூறலாம். அன்பும் தெளிவும் உருவாய் உள்ள வளர்ந்த குழந்தை.
கதை கிராமத்தை சுற்றியது.
இதில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அமைதியாக ஏதோ ஒரு நியாயத்தோடும் தர்மத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
கதையை பற்றி சிறிது எழுதினாலும் இனி வாசிக்கப்போவோரின் சுவாரசியம் கலைந்துவிடுமோ என்றும் தோன்றுகிறது....
ஆசிரியரின் முன்னுரையும் மிக அருமை.
* நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.
* நல்லதும் கெட்டதும் எங்கும் உண்டு. நாடுவது என்னவென்பதே முக்கியம்.
* ஒண்ணு நியாயமாகவும் இன்னொண்ணு அநியாயமாகவும் இருந்தாக்க தீர்ப்பு சொல்றது நமக்குச் சுளுவு. ரெண்டு நியாயத்துக்கு நடுவிலே போய்த் தீர்ப்பு சொல்லவே கூடாது.
*உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம்’
* “மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்” என்று ஆங்கிலத்தில் சொன்னான் ஹென்றி; “அண்ட் எனிதிங் குட் பி லைக் எனி அதர் திங்!”
இது வாசிப்புக்கான புத்தகம் மட்டும் கிடையாது, புரிதலுக்கான புத்தகம், அறிதலுக்கான புத்தகம்...
வாசியுங்கள், உங்களை சுற்றி உள்ள Henryகளை காண்பீர்கள், உங்களில் இருக்கும் Henry ஐயும் காண்பீர்கள்!!!
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.