Breaking

Thursday, February 27, 2020

2018 தேர்விலும் முறைகேடு? விசாரணையில் அம்பலம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.,சி., 2018ல் நடத்திய, 'குரூப் - 4' தேர்விலும், இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தன் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட முயன்றது தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4; குரூப் - 2 ஏ, வி.ஏ.ஓ., தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, சென்னை, முகப்பேரை சேர்ந்த, இடைத்தரகர் ஜெயகுமார், 38; டி.என்.பி.எஸ்.சி., ஊழியர் ஓம்காந்தன், 45 உட்பட, 47 பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இவர்களில், ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இவர்கள், 2018ல் நடந்த, குரூப் - 4 தேர்விலும் முறைகேடு செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற வைக்க, 40 பேரிடம், தலா, ஒன்பது லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளனர். விடைத்தாள்கள் ஏற்றி வந்த வாகனத்திற்கு பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர் விழிப்புணர்வுடன் இருந்துள்ளார். இதனால், இவர்களின் சதி திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், அவர்களிடம், பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளனர். மேலும், முறைகேடு செய்ய வசதியாக இருக்கும் என்பதால், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களை தேர்வு செய்ததும் தெரியவந்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog